Monday, May 23, 2011

ஒரு சிறிய கதை (100 வார்த்தைகள் மட்டும்)

அப்பா..நீங்க இன்னும் சாப்பிடலயா?..கேட்டாள் என் மகள்..இல்லமா..உங்க அம்மா வாத்தியார் வீட்டுக்கு வேளைக்கு போயிருக்காங்க..வந்ததும் சாப்பிடனும்.. (நான்)அப்பா. நான் உங்களுக்கு சமையச்சு போடுறேன்.(மகள்)..ஏதோ..பாத்திரங்களை உருட்டினாள்..அப்பா.இந்தாங்கா இது சாப்பாடு..இது ரசம்..சாப்பிடுங்க என்றாள்.. நானும் அதை சாப்பிட்டு முடித்தேன்! பாப்பா.உங்க அப்பாவுக்கு நீயே சாப்பாடு போட்டியா என் செல்லமே!..(அவள்).யாரு மைத்திரியா?( நான்)..என்னங்க உங்க மகள் உங்களுக்கு இப்பிடி ஒரு சோரு போட்டா நீங்களும் அதை சாப்டீங்களா? (அவள்)..அடி போடி அவளை பொருத்தவரைக்கும் அந்த தேநீர் குவளைல ரசம் இருக்கு..அதோட அடித்தட்டுல சாதம் இருக்கு..அது எனக்கு தெரியாட்டியும் ருசியத்தான் இருக்கு என் மகளோட சமையல்.(நான்)..பெண் குழந்தைகள்..சமையல் வேளைக்கு அமர்த்தப்படுவதை ஒரு காலத்தில் எதிர்த்து..விறகு அடுப்பின் ஜ்வாலையில் எதிர்பாராவிதத்தில் கண் பார்வைய இழந்த (நான்)..

தழுவல்:
http://twitter.com/#!/TBCD/status/61427891187101696

1 comment:

Unknown said...

நல்ல கதை.
ஒவ்வொருவர் பேசுவதும் தனி வாக்கியங்களாக அமைத்து நிறுத்தற்குறிகளை சரியாய் அமைத்திருந்தால் இன்னும் அழகு சேர்ந்திருக்கும்.

Post a Comment