Thursday, June 23, 2011

#என்னமோ நடக்குது# -- சிறுகதை(150 வார்த்தைகள் மட்டும்)

எப்படி இருக்க செல்லம், உனக்கு எவளோ சொன்னாலும் நீ கேட்கவே மாட்டியா, பாரு நம் வாழ்க்கை இது, அவனுங்க யாரு இதை முடிவு பன்ன? சொன்னபடி கேளு..சரிடா செல்லம். நம்ம ஏற்கனவே முடிவு பண்ணின மாதிரி வர வெள்ளிக்கிழமை.

யோவ் நீயெல்லாம் சோத்த திங்கறயா இல்ல வேற எதையாவது திங்கறயா? எத்தை தடவதான்யா சொல்றது..ஒழுங்கு மரியாதியா அசலக்கட்டு இல்லனா வட்டியக்கட்டு..இதுக்கு மேல பொருமையா இருக்க முடியாது..அதையும் பாக்குறேன்யா.

அண்ணே, எந்த மாற்றமும் இல்லை, நீங்க எவ்ளோ வேனும் கேளுங்க,,சரிணே.. நான் பார்துக்கறேன்.

அம்மா என்னை மன்னிச்சுக்க எனக்கு இதை தவிர வேற வழி தெரியலை..

சார், நான் சொல்றத மட்டும் கேளுங்க..தேவையில்லாம இதுக்கு போய் வருத்தபடதீங்க..என் கிட்ட விட்டுருங்க..

I love you, I love you, I love you..hmmm OKvaa,,cool

என்ன சொல்ற..சரி..OK..இப்பவே வறேன்

நான் ரெடியா இருக்கேன், சீக்கிறம் வாங்க..இன்னைக்கு ராத்திரி..அதெல்லாம் இப்ப சொல்ல முடியாது.

என்ன சார் இது உங்களுக்கு OK-னா நாளைக்கே முடிச்சிடலாம்,,உங்க விருப்பம் தான் எனக்கு முக்கியம்.

அடச்சே..என்ன கருமண்டா கண்ணை புடுங்கினவன்..என் காதையும் புடுங்கியிருக்க கூடாதா..இங்க இந்த STD Booth-ஐ வெச்சிட்டு கண்டதெல்லாம் காதுல கேட்க வேண்டியிருக்குன்னு சலித்துக்கொண்டு தன் கடையை சாத்தினார். STD-கார கனகு அண்ணன்.

Wednesday, June 22, 2011

சத்தியம் பண்ணலாம் வாங்க சத்தியம்

நண்பர்களே, இங்க கன்னடத்து அரசியலில் ஒரு முக்கியமான நிகழ்வு, அதாகப்பட்ட முதல்வர் திரு.எடியூரப்பா அவர்களை முன்னாள் பிரதமரின் மகனும்,முன்னாள் முதல்வருமான திரு.குமாரசாமி அவர்கள் அவதூராக பேசிவிட்டாறாம்,எடியூரப்பா மகனுக்கு சீட் குடுக்க மாட்டேன்னு சொல்லிட்டு சீட் குடுத்துட்டாறாம்,நிறைய ஊழல் செய்யராறாம் இதுதான் திரு.குமாரசாமிய்ன வாதம்.

இதை கேட்ட நம்ம திரு.எடியூரப்பா, வெகுண்டு ஒரு பகிரங்க கடிதம் வெளியிட்டாரு.. மானா வாரியா எல்லா பத்திரிக்கையிலும் இது வந்தது.திரு.குமாரசாமி என் மீது வீண் பழி சுமத்துகிறார், இப்படியெல்லாம் ஆதாரம் இல்லாம் அவதூரு சொல்வதை அவர் நிருத்திக்கொள்ள வேண்டும், என் மீது சுமத்தப்பட்டது அபாண்டமான் பழி.. நான் வேண்டுமானால் தர்மஸ்தலா கோவிலுக்கு வந்து சத்தியம் செய்கிறேன், குமாரசாமி வர தயாரா?

இதை கேட்ட குமாரசாமியும் ஓகே.. நானும் வறேன்னு கிழம்பிட்டாருங்க.. இந்த உத்தமபுத்திரங்களின் சத்தியம் செய்யும் நிகழ்ச்சி வரும் 27-06-2011 திங்கள் அன்று தர்மஸ்தலா கோவிலில் மஞ்சுநாதர் (எ) சிவன் முன்பு நடக்கிறது.

இந்த செய்திய கேள்வி பட்டதும் உங்களுக்கு என்ன சொல்ல தோனுதுங்க..எனக்கு என்ன தோனுது தெரியுங்களா "போங்கடா மானங்கெட்ட _____ பயலுகளா" #முற்றும்#

Friday, June 17, 2011

தமிழ்நாடு அரசு Ultra Delux பேருந்துகள்

தகுந்த புகைப்பட ஆதரங்கள் இல்லாமல் இதை எழுதுவது சரில்லைன்னு பட்டது ஆனாலும், வருத்தத்தை பதிவு செய்ய சாட்சியம் தேவையில்லை, தவிர நான் எந்த பத்திரிக்கையின் நிருபனுமில்லை. பொதுவா ஒரு ஹோட்டலுக்கோ, லட்ஜ்க்கோ போனீங்கன்னா அங்க Standard,Delux,Utra Delux இப்படி பல வகையான ரூம்கள் இருக்கும், அது அந்த ரூம்களின் வசதிகளை அடிப்படையா வெச்சு வகைபடுத்தபட்டது. ஆன இங்க என்ன நடக்குது, Utra Delux-ன்னு பேர் மட்டும் தான் இருக்கும், ஆனா சரியான இருக்கை வசதி, ஜன்னல்,கதவு,திரைச்சீலை ஏன் சில நேரங்களில் நல்ல நடத்துனர், ஒட்டுனர் கூட இருக்கமாட்டீங்கறாங்க!!!

டொர டொரன்னு சத்தம் வர கதவு,ஜன்னல் நம்ம பயணத்தை ரொம்பவே நோகடிக்கும்.மழை நாட்களில் இன்னும் நிலைமை ரொம்ப மோசம் குடைகுள் மழைங்கற மாதிரி பேருந்துக்கு உள்ளயே மழைத்தண்ணி சொட்டும் மன்னிக்கனும் கொட்டும்! தப்பித்தவறி நடத்துனர், ஒட்டுனர்கிட்ட கேட்டீங்கன்னா, உங்கள ஏற இறங்க பார்த்துட்டு நல்ல வார்த்தை நாலு சொல்லி திட்டுவாங்க! இதெல்லாம் போதாதுன்னு ஹோட்டல்ங்கற பேர்ல ஒரு சகிக்க முடியாத ரோட்டோர கடைல நிருத்தி நம்ம பாக்கெட்டையும், வயித்தையும் பதம் பார்க்கிறதும் நடக்குது.

இந்த குறைகளை யார் வந்து சரி செய்யபோறாங்கன்னு தெரியலை!!! அதுவரைக்கும் இப்படி புலம்பி தவிச்சுட்டாவது இருப்போம்..என்னைக்காவது சம்மந்தப்பட்டவங்க காதுக்கு இது போகட்டும்.

Wednesday, June 15, 2011

பெங்களூர் பேருந்து நடத்துனர்களின் நூதன திருட்டு

இது எனக்கு நடந்ததுன்னு மட்டும் இல்லை, பெங்களூர்ல பஸ்ல பயணம் பண்ற நம்மில் பல பேருக்கு நடந்திருக்கும். நீங்க பஸ்ல ஏறினதும் நீங்க போக வேண்டிய இடத்து பேரைச்சொல்லி டிக்கெட் எடுக்க ஒரு 5 ரூபாய நீட்டுவீங்க, நடத்துனரும், ரொம்ப இயல்பா உங்க கையில ஒரு 2 ரூபாய கொடுத்துட்டு, இங்க ஒன்னுமே நடக்குலங்கற மாதிரி டிக்கெட் குடுக்காம போய்டுவாரு! 5 ரூபாய் டிக்கெட் எடுக்க வேண்டிய தூரத்துக்கு, டிக்கெட் இல்லாம நீங்க போய்ட்டு இருப்பீங்க, அவருக்கு 3 ரூபாய், உங்களுக்கு 2 ரூபாய், அரசாங்கத்துக்கு நாமம்.

இது 5 ரூபாய்ல மட்டும் நிக்கலைங்க, எந்த ரூட்ல கூட்டம் அதிகமா இருக்கோ அங்கயெல்லாம், அதிக அளவுல பணம் திருடப்படுது! இதுல வெக்கங்கெட்ட உண்மை என்ன தெரியுங்களா, நாமும் இந்த தப்புக்கு துணை போறதுதான்.நான் இந்த அசிங்கத்துல ஒரு இரண்டு முறை பங்கெடுத்ததுக்காக வெக்கப்படறேன் வேதனைப்படறேன்.இப்ப என்ன ஆனாலும் டிக்கெட் வாங்காமவிடறதில்லை. ஏன்னா "நானு தும்பா ஸ்றிக்ட்டு கண்ணோ" ("நான் ரொம்ப stric" in Kannada ).

இது வேற எந்த ஊர்லையும் நடக்குற் மாதிரி தெரியலை. அப்படி நடந்தாலும் நீங்க தயவு செய்து இந்த அசிங்கத்துக்கு துணை போகாதீங்க!!!

அப்துல்களாம், அன்னா ஹசாரே இவங்க செய்ய நினக்கிறதும் இதைதான்,நல்ல விசயம் நம்மகிட்ட இருந்து ஆரம்பிக்கட்டும். ஜெய்ஹோ இந்தியா!!!

Saturday, June 11, 2011

வெயிடிங் லிஸ்ட் E-Ticket - கவனம் தேவை

நண்பர்களே!,உங்களில் பலருக்கு இது முன்னமே தெரிந்திருக்கக்கூடும்,அதாகப்பட்ட இந்திய ரயில்வே இணையதளத்தின் முன்பதிவு சேவையை பயன்படுத்தி நாம் பயணச்சீட்டு முன்பதிவு செய்கிறோம்,அது எதிர்பாராவிதத்தில் வெயிட்ங் லிஸ்ட்ல வந்துவிடும், நாமும் தினமும் கண்ணும் கருத்துமாய் அதன் தற்போதைய நிலையை உருதிபடுத்திக்கொள்வோம், இது வரைக்கும் எல்லாம் சரியா இருக்க மாதிரியே இருக்கும், ஆனா இறுதியில் CHART PREPARED என்று வரும்போதுதான் வினையே இருக்கிறது,அந்த நேரத்தில் நமக்கான பயணச்சீட்டு இன்னமும் வெயிட்ங் லிஸ்டில் இருக்கும் பச்சத்தில், சரிவிடுப்பா ரயில் ஏறினதுக்கப்புறம் TTR-கிட்ட பேசி சீட் வாங்கிடலாம்ன்னு, யதார்த்தமா போய் ஜம்முனு ரயில் ஏறி, நல்ல வாட்டமான ஜன்னலோரா சீட்ல உக்கார்ந்து விடுவோம், அப்பதான் வரும் நமக்கான ஆபத்து TTR அல்லது SQUAD வடிவில், உங்க டிக்கெட் இன்னும் கன்பெர்ம் ஆகலை, நீங்க இந்த வெயிடிங் லிஸ்ட் E-Ticket-ஐ வெச்சிடு ரயில் ஏறினது,டிக்கெட் எடுக்காம ஏறினது மாதிரி!,எடுங்க பைன் 300 ரூபாயைன்னு புடிச்சு வாங்கு வாங்குன்னு வாங்கிடுவாங்க! நாம இதுவரைக்கும் சேர்த்து வெச்சிருந்த மானம்,மரியாதையெல்லாம் பத்து காசுக்கு வித்துபோய்விடும்.

இதுக்கு நானே ஒரு உதாரணம், பெங்களுரில் இருந்து கோயமுத்தூருக்கு ரயிலில் போனப்ப இப்படி மாட்டிக்கிட்டு,பெருந்தன்மையான ஒரு SQUAD CHECKER-ஆல் ஓசூரில் இறக்கிவிடப்பட்டு,ஓடிப்போய் அவசரமா GENERAL TICKET வாங்கி கோயமுத்தூத்தூர் போய் சேர்ந்தேன்.

ஆகையால்,நண்பர்களே! CHART PREPARED ஆனத்துக்கு அப்புறமும் உங்க E-Ticket வெயிடிங் லிஸ்ட்ல இருந்தா தயவுசெய்து அதை வெச்சுட்டு ரயில்ல ஏறாதீங்க! அந்த பணம் உங்க வங்கி கணக்குக்கு வந்துவிடும். உங்கள் பயணம் இனியதாக சுகுமாரின் வாழ்த்துக்கள்!!!

Thursday, June 2, 2011

கக்கூஸ் (எ) கழிவறை

போன திங்கட்கிழமை ஈஷா யோகா ஆசிரமம் போய் வந்தேன்,இரு வாரம் முன்பு பெங்களூரின் ராஜேஸ்வரி கோவில்! இந்த இரண்டு இடத்திலும் என்னை எரிச்சல் அடைய/முகம் சுழிக்க வைத்த விசயம், அசுத்தமான கழிவறைகள். முன் எப்போதும் போல் அல்லாமல் ஏனோ இந்த முறை கோபம் அதிகமாக! ஒரு வேளை இங்க கொட்டி தீர்க்கலாம் என்பதாலானு தெரியலை.

இந்த கழிவறைகள் அசுத்தமா இருக்கா யார் யாரெல்லாம் காரணம்? சம்மந்தப்பட்ட நிர்வாகமா? இல்லை இந்த கழிவறைகளை பயன்படுத்துர நம்மில் யாரோ ஒருத்தரா?

பொது இடத்துல இருக்குறதுதான நமக்கு அடுத்து வரப்போறவன், யார் வந்து கேட்கபோறான்ங்கற அழச்சியம் நியமானது தானா? உங்க வீட்ல இப்படி இருப்பீங்களா?

கக்கூஸ் போனா தண்ணி ஊத்தனும்னு..உங்களுக்கு யாரும் சொல்லித்தந்தது இல்லையா என்ன?

அடுத்தமுறை பொது இடங்களில் கழிவறைகளை பயன்படுத்தும் போது கொஞ்சம் ஜாஸ்தியாவே தண்ணி ஊத்திட்டு வாங்க!!! உங்களுக்கு சொர்கத்தில் இடம் கிடைக்காட்டியும் வேற ஒரு இடத்துல பயன்படுத்த சுத்தமான் கழிவறை கிடைக்கும்!. நல்ல விசயம் நம்ம கிட்ட இருந்து தொடங்கினா, அது என்னைக்காவது ஒரு நாள் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்ப்படுத்தும் என நம்புவோம்!.சன் செய்திகளுக்காக சுகுமாரன்