Thursday, June 2, 2011

கக்கூஸ் (எ) கழிவறை

போன திங்கட்கிழமை ஈஷா யோகா ஆசிரமம் போய் வந்தேன்,இரு வாரம் முன்பு பெங்களூரின் ராஜேஸ்வரி கோவில்! இந்த இரண்டு இடத்திலும் என்னை எரிச்சல் அடைய/முகம் சுழிக்க வைத்த விசயம், அசுத்தமான கழிவறைகள். முன் எப்போதும் போல் அல்லாமல் ஏனோ இந்த முறை கோபம் அதிகமாக! ஒரு வேளை இங்க கொட்டி தீர்க்கலாம் என்பதாலானு தெரியலை.

இந்த கழிவறைகள் அசுத்தமா இருக்கா யார் யாரெல்லாம் காரணம்? சம்மந்தப்பட்ட நிர்வாகமா? இல்லை இந்த கழிவறைகளை பயன்படுத்துர நம்மில் யாரோ ஒருத்தரா?

பொது இடத்துல இருக்குறதுதான நமக்கு அடுத்து வரப்போறவன், யார் வந்து கேட்கபோறான்ங்கற அழச்சியம் நியமானது தானா? உங்க வீட்ல இப்படி இருப்பீங்களா?

கக்கூஸ் போனா தண்ணி ஊத்தனும்னு..உங்களுக்கு யாரும் சொல்லித்தந்தது இல்லையா என்ன?

அடுத்தமுறை பொது இடங்களில் கழிவறைகளை பயன்படுத்தும் போது கொஞ்சம் ஜாஸ்தியாவே தண்ணி ஊத்திட்டு வாங்க!!! உங்களுக்கு சொர்கத்தில் இடம் கிடைக்காட்டியும் வேற ஒரு இடத்துல பயன்படுத்த சுத்தமான் கழிவறை கிடைக்கும்!. நல்ல விசயம் நம்ம கிட்ட இருந்து தொடங்கினா, அது என்னைக்காவது ஒரு நாள் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்ப்படுத்தும் என நம்புவோம்!.சன் செய்திகளுக்காக சுகுமாரன்

2 comments:

தடம் மாறிய யாத்ரீகன் said...

நல்ல விஷயம்தான்!! எல்லோரும் பின்பற்றினால் நல்லதுதான்.

asksukumar said...

ஊங்களுக்கு தெரியுது அசோக்..எல்லோருக்கும் தெரிஞ்சா நல்லாது தான்!!!! நன்றி

Post a Comment