Wednesday, June 15, 2011

பெங்களூர் பேருந்து நடத்துனர்களின் நூதன திருட்டு

இது எனக்கு நடந்ததுன்னு மட்டும் இல்லை, பெங்களூர்ல பஸ்ல பயணம் பண்ற நம்மில் பல பேருக்கு நடந்திருக்கும். நீங்க பஸ்ல ஏறினதும் நீங்க போக வேண்டிய இடத்து பேரைச்சொல்லி டிக்கெட் எடுக்க ஒரு 5 ரூபாய நீட்டுவீங்க, நடத்துனரும், ரொம்ப இயல்பா உங்க கையில ஒரு 2 ரூபாய கொடுத்துட்டு, இங்க ஒன்னுமே நடக்குலங்கற மாதிரி டிக்கெட் குடுக்காம போய்டுவாரு! 5 ரூபாய் டிக்கெட் எடுக்க வேண்டிய தூரத்துக்கு, டிக்கெட் இல்லாம நீங்க போய்ட்டு இருப்பீங்க, அவருக்கு 3 ரூபாய், உங்களுக்கு 2 ரூபாய், அரசாங்கத்துக்கு நாமம்.

இது 5 ரூபாய்ல மட்டும் நிக்கலைங்க, எந்த ரூட்ல கூட்டம் அதிகமா இருக்கோ அங்கயெல்லாம், அதிக அளவுல பணம் திருடப்படுது! இதுல வெக்கங்கெட்ட உண்மை என்ன தெரியுங்களா, நாமும் இந்த தப்புக்கு துணை போறதுதான்.நான் இந்த அசிங்கத்துல ஒரு இரண்டு முறை பங்கெடுத்ததுக்காக வெக்கப்படறேன் வேதனைப்படறேன்.இப்ப என்ன ஆனாலும் டிக்கெட் வாங்காமவிடறதில்லை. ஏன்னா "நானு தும்பா ஸ்றிக்ட்டு கண்ணோ" ("நான் ரொம்ப stric" in Kannada ).

இது வேற எந்த ஊர்லையும் நடக்குற் மாதிரி தெரியலை. அப்படி நடந்தாலும் நீங்க தயவு செய்து இந்த அசிங்கத்துக்கு துணை போகாதீங்க!!!

அப்துல்களாம், அன்னா ஹசாரே இவங்க செய்ய நினக்கிறதும் இதைதான்,நல்ல விசயம் நம்மகிட்ட இருந்து ஆரம்பிக்கட்டும். ஜெய்ஹோ இந்தியா!!!

6 comments:

மதுரை சரவணன் said...

anniyan dayalog ninaivil varukirathu... ithu mika periya thappu kumbi paatham kidaikkum... good post. thanks for sharing. s i had such experience.

asksukumar said...

மிக்க நன்றி சரவணன்!!!

vijayan said...

தமிழன் கோடிக்கணக்கில் ஊழல் செய்து பெருவாழ்வு வாழ்ந்து கொண்டுஇருக்கும் போது,கேவலம் 2 ரூபாயிக்கும் 3 ரூபாயிக்கும் ஊழல் செய்யும் கன்னடக்காரனை பார்த்து வெட்கபடுகிறேன் வேதனைபடுகிறேன்.

Anonymous said...

I have faced this many times when I was in Bangalore in 90's. Surprise to know it never changed !!!

asksukumar said...

@vijayan, நடத்துனரால அவ்ளோதான் முடியும் மத்தபடி ஜித்தனுக இங்கயும் இருக்கானுக!

Karthik said...

Ithula en experience thaan kodumai, Namma ooru ponnu itha mathiri panna poiyu checking inspector kitta matti fine katta sollitaanga 120 Rs fine.. aana namma ooru ponuga pathi thaan ungaluku theriyumae kaesae illa gali parsu busku alava thaan kasu irunthuchu pavam.. romba checking inspector kitta englishla paesittu irunthuchu pavam appavae naan mild ah doubt aanaen ithu namma ooru ponnu thaan nu. Checking romba strict ah fine kattu illa police stationuku vaa nu solla alluga arambichutaanga..
apparam naan thaan namma ooru ponna iruntha katti 100 koduthaen..pavam antha ponnu 100 enkitta vankittu athukitta iruntha 20 um koduthuttu enkitta innamum kasu kaeka koocha pattu tu iruntha 3 rs la adjust pannitu veetuku poiyurukku!!! PAVAM PONNU ---Ithula highlight enna na conductor "oru pombalai"...

Post a Comment