Saturday, July 30, 2011

இருபாதை ஒரு பயணம் (2in1 சிறுகதை)

கதவை ஒட்டின ஜன்னலின் வெளியே கணேஷ் நின்றிருக்க,உள்ளே கீதா. அவளிடமிருந்து மூன்று ஜன்னல் தள்ளி கவிதா இருக்க வெளியே நின்றிருந்தான் வஸந்த்.

"அப்ப நீங்க இவ்ளோ நாள் என்னோட பழகினதெல்லாம் பொய்யா?"

"என்னை உனக்கு அவ்ளோ புடிக்குமா?"

"எது பொய் எது நிஜம்னு என்னால இப்ப சொல்லமுடியலை"

"அது அப்படியில்லைமா, நான் உன்னை விரும்பினது உண்மைதான் ஆனா இப்ப என்னால் அது முடியாது, என்னை மன்னிச்சிடு!"

"ஆமாம், நான் உன் பின்னால சுத்துனதுப்ப தெரியலையா?"

.....டீ..சாய்..டீ..சாய்.. டீ..சாய்..காபி..காபி...காபி.......

"ஏன், முடியாதுன்னு தெரிஞ்சும் இப்படி பண்ணீங்க?

"அப்ப தெரியலை ஆனா இப்ப தெரியுது..என்னை மன்னிச்சிருமா"

" நீங்க நான் ஊருக்கு போனதுக்கு அப்புறம் என்னை மறந்துடுவீங்கதான்?"

"நான் உன்னை உண்மையா காதலிக்குறேன்"

"அதுமட்டும் என்னால முடியாது"

"என்னால உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாது"

"ஏன், முடியாதுன்னு தெரிஞ்சும் இப்படி பண்ணீங்க?"

"என்னை இதுக்குமேல எதுவும் கேட்காத, இந்தா ரெஷிப்ட் உன் திங்க்ஸ் எல்லாம் பார்சல்ல வருது, நாளைக்கு சாயங்காளம் உங்க அண்ணனை எடுத்துக்கச்சொல்லு"

"கணேஷ்! கணேஷ்!......." பயணிகளின் கணிவான கவனத்திற்கு...வண்டி எண்!"

"இப்ப முடியாதுன்னுதான் சொன்னேன், இன்னும் ஒரு வருசம், அப்புறம் கல்யாணம் தான்"

"............"

"நான் போய் பசங்களுக்கு டீரீட் வெச்சு இதை கொண்டாடனும், பார்த்துப் போ, டாடா"

"வஸந்த்!வஸந்த்!...."....யாத்திரியோ கிரிபியா தீயான் தீஜியே!..காடி நம்பர்.."

"உங்க அம்மா சாகக்கெடக்குறாங்க..அவங்க தம்பிக்கு உன்னை கல்யாணம் பண்ணிப் பார்த்துட்டு போகனும்னு நினைகிறதா உங்க அண்ணன் போன்ல சொன்னான் என்ற கணேஷின் என்னமும்.."

"நான் உயிருக்குயிரா காதலிச்சவன், என்னை ஏமாத்திட்டான்; இப்ப எனக்கு வாழ ஒரு பிடிப்பு வேணும், என்னை உயிரா காதலிக்கர நீ தான் எனக்கு சரி என்ற கவிதாவின் என்னமும்.."

.....டீ..சாய்..டீ..சாய்.. டீ..சாய்..காபி..காபி...காபி.......என்ற ஓசையில் கலந்தது.

Friday, July 29, 2011

ஒரு வீட்ல பேய்! சிறுகதை(50 வார்த்தைகளில்)

வாயில் ஈ போய்வந்து கொண்டுடிருந்தது. சுவற்றை வெரித்துப் பார்த்துக் கொண்டிருந்த அவன் கண் இமையை மூடினார் இன்ஸ்பெக்டர்.

நேத்து ராத்திரி கூட நல்லாத்தான் இருத்தாங்க!

நல்லிரவு வீட்டுக்குள் வந்ததும், துரிதமாக எதையோ தேடிக்கொண்டு இருந்தான் சிவா. என்னடா தேடற? ஒன்னும் இல்லை என்று பதில் சொன்னவன்! ஒரு நிமிடம் திடுக்கிட்டான்..சக்தி ஊருக்கு போய் ஒரு வாரம் ஆனது உறைத்தது.

திரும்பியன், சுவற்றில் சரிந்து அமர்ந்தான்.பயத்தில் உயிர் பிரிந்தது.

Monday, July 25, 2011

லஞ்சம் - சிறுகதை (ஒரு Non-Linear Narration முயற்சி)

இன்று:

லஞ்சம் வாங்கிய பொதுப்பணித்துறை அதிகாரி சஸ்பென்ட். கையும் களவுமாக பிடிபட்டார். லஞ்சம்

பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி, கைது செய்யப்படுவாரா? என்ற கேள்விக்கு கருத்து தெரிவிக்க

உயர் அதிகாரிகள் மறுப்பு. எல்லாத் தொலைக்காட்சி செய்திகளிலும் ஆதிமூலத்தின் புகைப்படம்

வருவதை காண எரிச்சலுற்று, அவர் தன் வீட்டின் மாடியிலுருந்து கீழே வரவேயில்லை.

மூன்று வாரங்களுக்கு முன்:

ஸ்வீட்,காரம்,காபி மனம் அந்த குளிர்ந்த அறையில் அமர்ந்திருந்த அனைவரின்

மூக்கையும்,மூலையையும் துளைத்து. இன்று புதிதாக சார்ஜ் எடுக்க வரும் புதிய நிர்வாக

பொறியாளரின் பராக்கிரமங்கள் பற்றியே அனைவரின் பேச்சும் இருந்தது. குறிப்பிட்ட நேரத்தில்

திடுக்கென அறைக்குள் நுழைந்து சம்பிரதாயங்களை சடுதியில் முடித்து, அடிபொடிகளுக்கு விடை

கொடுத்து, தன் கண்ணி மேல் மட்ட கூட்டத்தை துவக்கின வினேஸ் குப்தா ஆகிய இவரை பலருக்கும்

பிடித்திருக்கவில்லை.

கை சுத்தமானவர்களின் மூல வாக்குமூலத்தில் சில அசுத்தங்களின் பட்டியலை தயாரித்தார் இந்த

பாட்டியாலாக்காரர், அதில் முதல் இடத்தில் ஆதிமூலம்.

இன்று:

குசலம் விசாரிக்க வந்த தனபாலிடம், என் 25 வருச சர்வீஸ்ல எவனும் என்னக் கண்டுபுடிக்கலை

நேத்து வந்த பய எப்படி பொறி வச்சான்னே தெரியலை...எலும்பு கிடைக்காத ஏதோ

எச்சகலை...தான்யா ச்ச..பொண்டாட்டி,புள்ளங்க மூஞ்சில முளிக்க முடியலையா என்றார் ஹீன

ஸ்வரத்தில்...ஸ்பெண்ட் தான் பண்ண முடியும் ஆதி, இந்த டீ.வி.க்காரனுக சும்மா ஏத்திவிடுறானுக,

தனபாலின் சமாதானம், விஸ்கியின் கசப்பை சற்று குறைப்பதாய் உணர்ந்தார் ஆதிமூலம்.

போன வாரம்:

யோவ் என்னையா..இது? பில் வாங்க வரைக்கும் நல்ல வளஞ்சு கும்புடு போடறீங்க..சொன்னது என்ன

ஆச்சு? போனில் எதிர்முனையில் இருப்பவனை இங்கேயே முறைத்துப் பேசிக் கொண்டு இருந்தார்.

காலுக்கு கீழ் மணல் உருவிக்கொண்டு கடலுக்குள் போனது..கையில் இருந்த பீயரை உள்ளே

விட்டவர்,வசந்தனின் கழுத்து தங்க சங்கலியை உற்று பார்க்க தவரவில்லை..

கான்ட்ராக்கடருங்க நீங்க மட்டும் லம்பா அடிச்சு இப்படி பெருசா செயின் போடுவீங்க!நாங்க சும்மா

இருக்கனுமா?

"ஐயா, அண்ணன் உங்க கிட்ட இதை குடுக்க சொல்லிதான் என்னை அனுப்பினாருங்க!"

"இங்க வேண்டாம், உள்ள வெய், காட்டேஜ்ல வந்து குடு", வசந்தன் தந்த பெட்டியில் சொல்போன்.

நேற்று:

ஹாலோ..யோவ் என்ன சொல்லு..ஆங்..மதியானம் மூனு மணிக்கா..அந்த பார்ல கீழ வேண்டாம்யா

ஜனக்கூட்டம் ஜஸ்தி..Roof Top- la table புக்பண்ணு இப்பதான் பில் வாங்கிட்டயில்ல" ஹா ஹா

ஹோ" ஆதி வெடித்துச் சிரித்தது காலியான வராந்தாவில் எதிரோலித்தில் அசசோக மரதிலிருந்த

காக்கைகள் பறந்தன.

மொட்டை மாடியின் ஒரு ஓரமான மேஜையில், ஆதியின் வாய்க்குள் ஜானி வாக்கிங்கில்

போய்க்கொண்டு இருந்து. பேச்சும்,விஸ்கியும் அதிகமாகி மூன்று மணி நேரம் ஆகியும் ஓய்வதாய்

தெரியவில்லை!

எல்லாம் முடிந்து கிளம்பும் நேரம் வந்தது,லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள், போலிஸ் சகிதம் வந்தனர்,

பணம் கைமாரும்போது கரெக்கடா கையும்,களவுமாக படிபட்டார் ஆதிமூலம். சஸ்பென்ட ஆடர் சகிதம்

அங்கு நுழைந்தார் குப்தா.

இன்று:

தனபாலு, அந்த குப்தா கூட இருப்பானே. அட்டெண்டர் செல்வராஜ் அவனைக் கேட்டா எல்லாம்

தெரியும்..அவனை போன்ல புடிய்யா!

டேய் செல்வோம்..அதான்யா செல்வம்...நம்ம ஆதி சாரை அந்தாளு எப்பிடி கண்டுகினாரு?

"அய்யா. இது பெரிய இடத்து விவகாரம் என்னய கேட்டா நான் என்ன சொல்றதுங்க"

"என்னவா..ம்..குடு நான் கேக்குறேன்" "யோவ் செல்வம் எப்பிடியா இந்த ச்ப்பாத்தி என்னை புடிச்சான்"

செல்வம் தயங்கி சொல்ல ஆரம்பித்தார்."அய்யா நேத்து பெரிய ஐயா,பீல்டுல இருந்து வந்தப்ப,

"செலுவெம், ஆதிமுலாம் எங்கைனு" உங்க சீட்டைப் பார்த்துட்டு கோபமா கேட்டாருங்க.

நீங்க அந்த M-book, bill எழுதுறத விசயமா, இனிஷ்பெக்சன் பொயிருக்கிறதா சொன்னேன்.

உங்க சொல்லுபோனுக்கு கூப்டாரு, உடனே ஐயா போனை எடுத்துட்டீங்க ஆனா நீங்க, இந்த பக்கம்

பேசாம அந்த கான்டாக்டருகிட்ட துட்டு பத்தி பேசிட்டு இருந்தீங்க. பெரிய ஐயா எல்லாத்தையும்

சட்டுனு அவுரு போன்ல பதிஞ்ச்சிட்டாரு.

"அவருதான் போலிஸ்க்கு, லஞ்ச ஆபீசுக்கு எல்லாம் தகவல் சொன்னாருங்க!"

சரி சரி நாங்க பாத்துக்குறோம்,நீ இதையெல்லாம் வெளியில சொல்லிட்டு இருக்காத என்றவாரே

ஆதியிடம் திரும்பினார் தனபால்.

எப்படியா? நான் இதைக் கவனிக்கவேயில்லயே! என்று தலையில் அடித்திக் கொண்டார் ஆதிமூலம்.

"ஆதீ!, ஏது இந்த புது சொல்போன்?"

"அது ஒருத்தன் குடுத்தான்,நல்லா FM-ரேடியாயெல்லாம் கேட்குதுப்பா"

"எப்பவுமே இப்படிதான் ஹெட்போன் போட்டு FM கேட்டுட்டே இருப்பியா?"

"ஆமா எல்லாரும்,பண்றதுதான இது?

யோவ் அதான் இப்ப வெனையா முடுஞ்ச்சிருக்கு!. ஹெட்போன் போட்டுருக்கும் போது கால் வந்தா

அது தானா ஆன் ஆயிடும்யா, அப்படி வேண்டாம்னு நீதான் மாத்தி வெச்சுக்கணும்!. ஒசுல வந்த

போனுதான அதன் உனக்கிதெல்லாம் தெரியலை.

நீ உனக்கு போன்வரது எவனுக்கும் தெரியக்கூடதுன்னு! போனை சைல்ன்ட்லயே வெச்சுக்குற

அதுபாட்டுக்கு ஆன் ஆகி உன் கெட்ட நேரம் அந்தாளு கிட்ட சிக்கிட்ட என்றான் தன்பால்.

லஞ்சமாக வந்த சொல்போனே அவரின், லஞ்ச முகத்தைக் காட்டிக் கொடுத்ததை என்னி நொந்து

கொண்டார் ஆதிமூலம்.

லஞ்சம் வாங்குறதால இப்படி இன்னும் நிறைய பேர் மாட்டுவாங்க, ஆன கடுமையான தண்டனை

இங்கயில்லை அது வேண்டும் என்று வினேஸ் குப்தா பொதுநல வழக்குத் தொடர்ந்திருப்பது மாலை

தொலைக்காட்சி செய்தியில் வந்தது.

Monday, July 18, 2011

லேப்டாப்..லப்...டப்

9:30- மணி ராத்திரிக்குக்கு தான் பஸ், இப்ப மாலை 6:30 மணிதான் ஆச்சு, ஒரு கட்டிங்க போட்டுட்டு ஜாலியா போக வேண்டியதுதான் இப்படி செல்போனில் அந்த முனையில் இருந்த அன்பு(எ) அன்பழகனிடம் சுகுமார் சொன்னது, பக்கதுல இருந்த சுடுகாட்டு கல்லறைக்குள்ள இருந்தவங்களுக்கும் கேட்டிருக்கும்.

காதலை காதலிகிட்ட சொல்லிக் கூட சம்மதம் வாங்கிடலாம் இந்த செந்தங்கள் கிட்ட சொல்லறது இருக்கே ரொம்ப கஸ்டம்டா,,,இப்படி காலைல காப்பி குடுச்சதுலர்ந்து புலம்பி தீர்த்து கார்த்தியின் உயிரை எடுத்துக் கொண்டு இருந்தான் சுகுமார்.

அண்ணா போங்க எல்லாம் சரியாயிடும் என்று சமாதானப் படுத்தினான் கார்த்தி.

பழகிய மனம்தான் என்றாலும் கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் உள் இறங்கினார் பழைய சாமியார். கோழிக் கால் பறந்தது தட்டதிலிருந்து, அவன் வாய்க்கு.

மணி 8:00, அண்ணா போதும் போகலாம் என்ற கார்த்தியிடம், நான் நார்மலாதாண்டா இருக்கேன், I am alright! என்பதை பதிலாக்கினான்.

நான் மாரத்தஹல்லில உங்களை விடறேன், அங்கிருந்து ஆட்டோல மடிவாலா போய்டுங்க என்றுவிட்டு வண்டியை வுர்ர்ர்ர்ர்ர்ரருருருருரூமினான் கார்த்தி.

மாரத்தஹல்லியில் மூன்று ஆட்டோக்கள், "பரால்லா.." சொல்லிச் சென்றபின்,முன் வந்த ஆட்டோ "ஒன் அண்டு ஹாப் புக்கு மடிவாலா வர ஒத்துக்கொண்டார்.

ஆட்டோ டிரைவர்களிடம் பேசினலும் குத்தம் பேசலைன்னாலும் குத்தம், பேசித் தொலைவோம் என்று முடிவெடுத்து, பேச ஆரம்பிக்க அவரும் அருமையாக பேச ஆரம்பித்தார்,

அவரின் தினப்படி வருமானம்,பெங்களூரின் விலைவாசி,IT கம்பெனிகளின் வருமானம், ரெசிசன் எல்லாம் பேசியபடி சென்றனர், டொம்மளூர் தாண்டி, கோரமங்களா நோக்கி போய்க்கொண்டிருந்தர்கள் இருவரும்.

உள்ளே போன பழைய சாமியாரின் தயவில் சூ சூ வருவதற்கான சமிக்கைகள் வர, ஈஜிப்புராவை நெருங்கி விட்டிருந்தது ஆட்டோ "சார் சொல்ப ஸ்டாப் மாடீ" என்றான், சிக்னல் போட்டிருக்கு இங்க சைட்ல போங்க என்று ஒரு புதரைக்காட்டினார் தமிழில்.

அவன் இறங்கி ஓரமாக ஒதுங்க, சிக்கனலில் கிரீச்சிட்ட வகனங்களின் ஓளி கூச்சம் ஏற்படுத்த, இன்னும் சற்று ஒதுங்கி உள்ளே சென்று போய்க் கொண்டிருந்தான்.

அவனுக்கு முடிவதற்குள் சிக்னல் முடிந்துவிட்டிருந்தது. ஹாரன் ஒலி காதைப் பிளப்பது இதை உருதி செய்தது.

ஓடி வந்தவனுக்கு, வயிற்றிலிருந்து தொண்டைக்கு உருண்டைகள் உருண்டன. ஆட்டோ லாங் சாட்டில் பறந்து கொண்டிருந்தது......!!!!

ஏய்...ஓய்ய்ய..அய்யோ...சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...........டேய்ய்ய்ய..ங்கோ.............த்தா.....ஓடினான் நாபிகமலத்திலுருந்து மூச்சை இழு..த்துக் கொண்டு ஓடினான்.No Use..that auto flew away as if it had wings. the driver looted his bag..(திடீர் ஆங்கிலம் எதற்கு?..அவன் ஓடியது பெங்களூரின் கோரமங்களா ரோட்டில்..இங்க எல்லாம் Peter-வுடறவங்க ஜாஸ்தி).

இதுக்கு மேல ஓட முடியாது..திரும்பினால் வேறு ஒரு ஆட்டோ..அதில் ஏறி பழைய ஆட்டோவை துரத்திப் பிடிக்க உத்தேசம்.

தன் தலைக்குமேல் இருந்த செவ்வக கண்ணாடியில், சுகுமாரின் பதட்டத்தை தெரிந்து கொண்டார் இந்த ஆட்டோ டிரைவர். ஏனு ஆயித்து சார்? இதை எதிர்பார்த்தவன் போல்..சீக்கிரம்
போங்க சார் அந்த ஆட்டோ டிரைவர் நான் கீழ இறங்குனப்ப என் Bag-ஐ எடுத்துட்டு போய்ட்டான்.

சார் சொல்றன்னு தப்பா நினைக்காதீங்க, அவன் இந்நேரம் பதுங்கியிருப்பான். நீங்க எங்க போகனும்னு சொல்லுங்க அங்க கொண்டு விடறேன் அவன் நல்லவனா இருந்தா அங்க வருவான் என்றார்.

ஆட்டோ மெல்ல மடிவாளா KPN ஆபிஸ் நோக்கி நகர தொடங்கியது.

அந்த Bag-ல கம்பெனியின் புத்தம் புதிய Lenovo Laptop, பெத்தவங்களுக்கும், சொந்தங்களுக்கும் காட்ட வாங்கிக்கொண்ட காதலியின் போட்டோக்கள் இருந்தது...வேலைக்கு சேர்ந்த புதுசு..இன்னும் ஒரு மாசம் கூட ஆகலை..அதுக்குல்ல Laptop-ஐ தொழைச்சாச்சு..இனி ஏன் வீட்டுக்கு வறேன்னு சொல்லிட்டு வரலைன்னு அப்பா அம்மா கேட்பாங்க..சொல்லவா வேண்டாமா...காதல்..கல்யாணம்..வேலை..எல்லாம் போச்சு..போச்சு எல்லாமே!...கண்கள் கலங்கியது சுகுமாருக்கு.. நிறைய ஜில் தண்ணி குடிக்கனும் போல் இருந்தது.

"சார்..சார்.டென்சன் பண்னிக்காதீங்க..எங்க வூடு?" மாரத்தஹல்லி பக்கம் தோட்டனகண்டி..ஆமாவா? சரி சார் வெயிட் பன்னுங்கோ..அவன் வர்லீனா..போலிஸ் போங்ககோ..என்று சொல்லி பணம் வாங்க மருத்து சென்றுவிட்டார் புதிய ஆட்டோ டிரைவர்.

முதலில் ஒரு பாட்டில் ஜில் தண்ணீ.அப்புறம் "மச்சான் நான் மோசம் போய்ட்டண்டா..." உடைந்த குரலில் நண்பேண்டா அன்புவிடம் சூ சூ முதல் அவன் நிக்கும் இடம்வரை
எல்லாம் சொன்னான். எதிர்முனை இதை கொஞ்சம் ஜீரணிக்க கொஞ்சம் சமயம் எடுத்துக் கொண்டது.

"நீ அங்கயே இரு நான் அங்க வறேன்..மொதல்ல உங்க டீம் லீடருக்கு சொல்லிடு" என்றான் அன்பு..டேய் ககுமாரு..மச்சான்..நான் சொன்னது கேட்டுதா?

எல்லாம் போச்சுடா...சீக்கிரம் வாடா எனக்கு ரொம்ப பயமாயிருக்குடா என்றவன் எதிரில் "ஏனு சார் ஈங்க மாடி புட்டரி, தகோலி நிம்ம பேக்கு" என்று தன் பேக்கை கொடுக்க அந்த ஆட்டோ டிரைவர் நிற்பது போலவே அடிக்கடி தோன்றியது!

அன்பு வந்தான்,,யார் யாருக்கோ மொபைலில் பேசினான்..டேய் மடிவாளா போலிஸ் எடுத்துக்க மாட்டாங்களாம் ஏறு நாம கோரமங்களா போலிஸ் ஸ்டேசன் போகலாம் என்றான்.

இடம்: கோரமங்களா போலிஸ் ஸ்டேசன். கன்னடத்தில் தான் மாத்தாடினார்கள், எல்லாம் கேட்டுக் கொண்டார்கள்.

போலிஸ் தரப்பில் சுகுமாரின் மேல் இரண்டு குற்றச்சாட்டுகள், பேக்கை ஆட்டோவில் விட்டு ஏன் இறங்கி ATM-போக வேண்டும்? ஆட்டோ நம்பர் ஏன் பார்க்கவில்லை?

அதுசரி..இந்த ATM தான் .சூ சூ போனதை எப்படி சொல்றதுன்னு பயந்துட்டு..அப்படி சொல்லிட்டான் சுகுமார்.

இன்ஸ்பெக்டர் இல்லாத காரணத்தால் பெயர்,முகவரி..மொபைல் நம்பர் எல்லாம் எழுதிக் கொடுத்துவிட்டு காலை வரச்சொன்ன போலிசுக்கு ஒரு வணக்கம் போட்டு வெளியில் வந்து..ஒரு டீ குடித்தபோது இருவரும் உணர்ந்தது மணி இரவு 12:30

வீட்டுக்கு போகும் வழியெல்லாம் பார்க்கும் ஆட்டோ எல்லாம்..நம் Laptap-ஐ திருடுய ஆட்டோ போலவே இருந்தது!!!

கோக முகத்துடன் வரவேற்றான் கார்த்தி.இப்படி நடக்கும் என்று நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை...இப்படியெல்லாம் நடந்த எதுவுமே அறியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் நண்பன் ரோனால்ட்..

இப்பொழுது சுகுமாரின் டீம் லீடர் சொன்னது அவன் காதுகளில் ஒலித்தது "You get the FIR dude, I will put you to the project leads, then we will meet the HR and they will let you know the recovery procedures"

இன்னும் சில பல யோசனைகள், புலம்பகள்..அப்படியே அசதியில் உறங்கிவிட்டனர் கார்த்தியும்,அன்புவும்..பாவம் தன் எதிர்காலமே கேள்விக்குறியாய் தெரிய விட்டத்தையும்,மின்விசிறியையும் வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான் சுகுமார்.

டீம் லீடர்,மேனேஜர்..வேலை..கதாலி..laptop..அம்மா..அப்பா..கல்யாணம்..இன்னும் என் நன்னவோ அவன் வெறித்த கண்களில் தோன்றி மறைந்தன.

அப்பொழுது அவன் சற்றும் எதிபாராத அது நடந்தது! Pray for me brother...Pray for me sister...A.R.ரஹ்மான் பாடினார்...சொல்போன் அடிப்பதை உணர்ந்து, பார்த்தான் ஏதோ ஒரு.. புதிய மொபைல் எண்!, ஹாலோ..ஆமாங்க சார்...சார் நீங்க...? சரிங்க சார்..நான் தான் சார். ஓகே சார்"

டேய் மச்சான், அன்பு,கார்த்தி எந்திரிங்கடா..இப்ப எனக்கு ஒரு போன் வந்துச்சு..என் laptop கெடச்சுடுச்சாம் கோரமங்களா போலிஸ் ஸ்டேசன் கிட்ட வந்து வாங்கிக்க சொன்னாங்க"

அண்ணா விடுங்கண்ணா..உங்களுக்கு அதே கவனமாயிருக்கும் தூங்குங்க என்ற கார்திக்கு நிலமையை புரிய வைக்கும் பொழுது அன்பும் எழுந்தான்.

மஸ்சான் பயாமாயிருகுடா..பத்தாயிற்ம.. இருபதாயிறம் கொண்டான்னு எவானவதுமிரட்டினா என்னடா பண்றது? என்றான் சுகுமார். உடனே அவனே ஒரு யோசனையும் சொன்னான், மச்சான் பேசாம் Just Dial-ல கேட்டு அந்த போலிஸ் ஸ்டேசன் நம்பர் வாங்கினா?

இது சரி என்றனர் இருவரும்."Thank you for contacting Just Dail! How can I help you Mr.Sukumar?" I Need Kormanga Polic Statation nUmber Please"

ட்ரிங்..ட்ரிங்..ட்ரிங்..ட்ரிங்..ஹலோ.................கோரமங்களா போலிஸ்ஸ்ஸ் ஸ்டேசன் என்றது எதிர்முனை!

சார் நாந்தான் சுகுமார், நைட்டு laptop தொலச்சுட்டு கம்ளேயண்ட் கொடுத்தேன்..யோவ் அதான் சொல்லியாச்சுல்ல laptop கெடச்சுட்ட்ச்சுனு..என்னயா உன்னோட கிராஸ் வெரிபிகேஸன் வேண்டிகிடக்கு வாயா....." ஓகே சார்.

கோரமங்களா போலிஸ் ஸ்டேசன் நோக்கி விரைந்தனர் அன்புவும், சுகுமாரும். அங்கு ஆட்டோ டிரைவர் கோதண்டத்தின் வெர்சன் இப்படி இருந்து...

சார்..ஒன்னுக்கு போறேன்னு இறங்கினவரு..சிக்னல் விட்டதும், என் ஆட்டோவைத் தாண்டி ஓடிப் போய் வேற ஆட்டோல ஏறி போய்ட்டாரு சார்.

"அப்பா நீ யேன்யா தடுக்ககலை?" "சார் எனக்கு பயாமாயிருந்தது சார்" "என்னையா பயம்" "அவரு பாம் எதாவது வெச்சு இருந்தா?"

"சரி அவன் போய்டான் அப்புறம் என்ன செஞ்ச?" "ஐயா நான் போய் விவேக் நகர் போலிஸ் ஸ்டேசன்ல அதை கொடுதுட்டேன் ஐயா"

இப்ப அன்பு,ஆட்டோ டிரைவர்,சுகுமார் மூவரும் விவேக் நகர் போலிஸ் ஸ்டேசனில், "சார் ஆ laptop இவன்து அந்தே"

உதவி போலிஸின் உதவியில் கண்விழித்த பெரிய போலிஸ்..துருவி..துருவிய..பல கேள்விகளுக்கு பதில்லளித்தபின் laptop-ஐ ஒப்படைத்தார். வழக்கம் போல மொய்யெழுதுதிவிட்டு.

வெளியில் இருந்த அந்த நல்ல ஆட்டோ டிரைவருக்கும் அன்பளித்துவிட்டு laptop-உடன் வீடு வந்து சேர்ந்தனர்.மணி சரியாக காலை 6:30!

இந்த பணிரெண்டு மணி நேரமும் அவர்கள் வாழ்க்கையில் மறக்கமுடியாததாய் இருந்து ரோணால்ட்,கார்த்தி,அன்பு மற்றும் சுகுமாருக்கு!.