Monday, July 25, 2011

லஞ்சம் - சிறுகதை (ஒரு Non-Linear Narration முயற்சி)

இன்று:

லஞ்சம் வாங்கிய பொதுப்பணித்துறை அதிகாரி சஸ்பென்ட். கையும் களவுமாக பிடிபட்டார். லஞ்சம்

பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி, கைது செய்யப்படுவாரா? என்ற கேள்விக்கு கருத்து தெரிவிக்க

உயர் அதிகாரிகள் மறுப்பு. எல்லாத் தொலைக்காட்சி செய்திகளிலும் ஆதிமூலத்தின் புகைப்படம்

வருவதை காண எரிச்சலுற்று, அவர் தன் வீட்டின் மாடியிலுருந்து கீழே வரவேயில்லை.

மூன்று வாரங்களுக்கு முன்:

ஸ்வீட்,காரம்,காபி மனம் அந்த குளிர்ந்த அறையில் அமர்ந்திருந்த அனைவரின்

மூக்கையும்,மூலையையும் துளைத்து. இன்று புதிதாக சார்ஜ் எடுக்க வரும் புதிய நிர்வாக

பொறியாளரின் பராக்கிரமங்கள் பற்றியே அனைவரின் பேச்சும் இருந்தது. குறிப்பிட்ட நேரத்தில்

திடுக்கென அறைக்குள் நுழைந்து சம்பிரதாயங்களை சடுதியில் முடித்து, அடிபொடிகளுக்கு விடை

கொடுத்து, தன் கண்ணி மேல் மட்ட கூட்டத்தை துவக்கின வினேஸ் குப்தா ஆகிய இவரை பலருக்கும்

பிடித்திருக்கவில்லை.

கை சுத்தமானவர்களின் மூல வாக்குமூலத்தில் சில அசுத்தங்களின் பட்டியலை தயாரித்தார் இந்த

பாட்டியாலாக்காரர், அதில் முதல் இடத்தில் ஆதிமூலம்.

இன்று:

குசலம் விசாரிக்க வந்த தனபாலிடம், என் 25 வருச சர்வீஸ்ல எவனும் என்னக் கண்டுபுடிக்கலை

நேத்து வந்த பய எப்படி பொறி வச்சான்னே தெரியலை...எலும்பு கிடைக்காத ஏதோ

எச்சகலை...தான்யா ச்ச..பொண்டாட்டி,புள்ளங்க மூஞ்சில முளிக்க முடியலையா என்றார் ஹீன

ஸ்வரத்தில்...ஸ்பெண்ட் தான் பண்ண முடியும் ஆதி, இந்த டீ.வி.க்காரனுக சும்மா ஏத்திவிடுறானுக,

தனபாலின் சமாதானம், விஸ்கியின் கசப்பை சற்று குறைப்பதாய் உணர்ந்தார் ஆதிமூலம்.

போன வாரம்:

யோவ் என்னையா..இது? பில் வாங்க வரைக்கும் நல்ல வளஞ்சு கும்புடு போடறீங்க..சொன்னது என்ன

ஆச்சு? போனில் எதிர்முனையில் இருப்பவனை இங்கேயே முறைத்துப் பேசிக் கொண்டு இருந்தார்.

காலுக்கு கீழ் மணல் உருவிக்கொண்டு கடலுக்குள் போனது..கையில் இருந்த பீயரை உள்ளே

விட்டவர்,வசந்தனின் கழுத்து தங்க சங்கலியை உற்று பார்க்க தவரவில்லை..

கான்ட்ராக்கடருங்க நீங்க மட்டும் லம்பா அடிச்சு இப்படி பெருசா செயின் போடுவீங்க!நாங்க சும்மா

இருக்கனுமா?

"ஐயா, அண்ணன் உங்க கிட்ட இதை குடுக்க சொல்லிதான் என்னை அனுப்பினாருங்க!"

"இங்க வேண்டாம், உள்ள வெய், காட்டேஜ்ல வந்து குடு", வசந்தன் தந்த பெட்டியில் சொல்போன்.

நேற்று:

ஹாலோ..யோவ் என்ன சொல்லு..ஆங்..மதியானம் மூனு மணிக்கா..அந்த பார்ல கீழ வேண்டாம்யா

ஜனக்கூட்டம் ஜஸ்தி..Roof Top- la table புக்பண்ணு இப்பதான் பில் வாங்கிட்டயில்ல" ஹா ஹா

ஹோ" ஆதி வெடித்துச் சிரித்தது காலியான வராந்தாவில் எதிரோலித்தில் அசசோக மரதிலிருந்த

காக்கைகள் பறந்தன.

மொட்டை மாடியின் ஒரு ஓரமான மேஜையில், ஆதியின் வாய்க்குள் ஜானி வாக்கிங்கில்

போய்க்கொண்டு இருந்து. பேச்சும்,விஸ்கியும் அதிகமாகி மூன்று மணி நேரம் ஆகியும் ஓய்வதாய்

தெரியவில்லை!

எல்லாம் முடிந்து கிளம்பும் நேரம் வந்தது,லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள், போலிஸ் சகிதம் வந்தனர்,

பணம் கைமாரும்போது கரெக்கடா கையும்,களவுமாக படிபட்டார் ஆதிமூலம். சஸ்பென்ட ஆடர் சகிதம்

அங்கு நுழைந்தார் குப்தா.

இன்று:

தனபாலு, அந்த குப்தா கூட இருப்பானே. அட்டெண்டர் செல்வராஜ் அவனைக் கேட்டா எல்லாம்

தெரியும்..அவனை போன்ல புடிய்யா!

டேய் செல்வோம்..அதான்யா செல்வம்...நம்ம ஆதி சாரை அந்தாளு எப்பிடி கண்டுகினாரு?

"அய்யா. இது பெரிய இடத்து விவகாரம் என்னய கேட்டா நான் என்ன சொல்றதுங்க"

"என்னவா..ம்..குடு நான் கேக்குறேன்" "யோவ் செல்வம் எப்பிடியா இந்த ச்ப்பாத்தி என்னை புடிச்சான்"

செல்வம் தயங்கி சொல்ல ஆரம்பித்தார்."அய்யா நேத்து பெரிய ஐயா,பீல்டுல இருந்து வந்தப்ப,

"செலுவெம், ஆதிமுலாம் எங்கைனு" உங்க சீட்டைப் பார்த்துட்டு கோபமா கேட்டாருங்க.

நீங்க அந்த M-book, bill எழுதுறத விசயமா, இனிஷ்பெக்சன் பொயிருக்கிறதா சொன்னேன்.

உங்க சொல்லுபோனுக்கு கூப்டாரு, உடனே ஐயா போனை எடுத்துட்டீங்க ஆனா நீங்க, இந்த பக்கம்

பேசாம அந்த கான்டாக்டருகிட்ட துட்டு பத்தி பேசிட்டு இருந்தீங்க. பெரிய ஐயா எல்லாத்தையும்

சட்டுனு அவுரு போன்ல பதிஞ்ச்சிட்டாரு.

"அவருதான் போலிஸ்க்கு, லஞ்ச ஆபீசுக்கு எல்லாம் தகவல் சொன்னாருங்க!"

சரி சரி நாங்க பாத்துக்குறோம்,நீ இதையெல்லாம் வெளியில சொல்லிட்டு இருக்காத என்றவாரே

ஆதியிடம் திரும்பினார் தனபால்.

எப்படியா? நான் இதைக் கவனிக்கவேயில்லயே! என்று தலையில் அடித்திக் கொண்டார் ஆதிமூலம்.

"ஆதீ!, ஏது இந்த புது சொல்போன்?"

"அது ஒருத்தன் குடுத்தான்,நல்லா FM-ரேடியாயெல்லாம் கேட்குதுப்பா"

"எப்பவுமே இப்படிதான் ஹெட்போன் போட்டு FM கேட்டுட்டே இருப்பியா?"

"ஆமா எல்லாரும்,பண்றதுதான இது?

யோவ் அதான் இப்ப வெனையா முடுஞ்ச்சிருக்கு!. ஹெட்போன் போட்டுருக்கும் போது கால் வந்தா

அது தானா ஆன் ஆயிடும்யா, அப்படி வேண்டாம்னு நீதான் மாத்தி வெச்சுக்கணும்!. ஒசுல வந்த

போனுதான அதன் உனக்கிதெல்லாம் தெரியலை.

நீ உனக்கு போன்வரது எவனுக்கும் தெரியக்கூடதுன்னு! போனை சைல்ன்ட்லயே வெச்சுக்குற

அதுபாட்டுக்கு ஆன் ஆகி உன் கெட்ட நேரம் அந்தாளு கிட்ட சிக்கிட்ட என்றான் தன்பால்.

லஞ்சமாக வந்த சொல்போனே அவரின், லஞ்ச முகத்தைக் காட்டிக் கொடுத்ததை என்னி நொந்து

கொண்டார் ஆதிமூலம்.

லஞ்சம் வாங்குறதால இப்படி இன்னும் நிறைய பேர் மாட்டுவாங்க, ஆன கடுமையான தண்டனை

இங்கயில்லை அது வேண்டும் என்று வினேஸ் குப்தா பொதுநல வழக்குத் தொடர்ந்திருப்பது மாலை

தொலைக்காட்சி செய்தியில் வந்தது.

3 comments:

jroldmonk said...

good (மற்றவை DM) :)

பிசாசு said...

நன்னா இருக்கு, அதென்னா நான்லீன்யர்?

sajaa said...

gud

Post a Comment