Thursday, October 20, 2011

திருட்டை திருடிய திருட்டு (சவால் சிறுகதை-2011)

யுடான்ஸ் சவால் சிறுகதை-2011 போட்டிக்கான எனது மூன்றாவது கதை.

சவால் படம்:


---------------------------------------------------------------------------------
சரவணன் நீங்க உறுதியா இருக்கீங்களா? Intelligence Bureau -வின் தலைமை அதிகாரி நடராஜின் இந்த கேள்விக்கு, அவர் கண்களை ஊடுருவி, கண்டிப்பாக சார், என்றார் இன்ஸ்பெக்டர் சரவணன்.

"இந்த விசயத்தல, சம்மந்தப்பட்டவங்க சாதாரண ஆளுங்க இல்லை..கமிஷ்னர் ஜெய், நேரடியா இவங்களை டார்கெட் பண்ணி, வாட்ச் பண்ண சொல்லியிருக்காரு, அதனாலதான் கேட்டேன்" என்றார் நடராஜன்.

"உங்க கேள்வியோட அழுத்தம் எனக்கு புரிஞ்சது சார், ஆனா, நம்மகிட்ட எல்லா ஆதாரமும் பக்காவாயிருக்கு" இந்த தெளிவுதான் மேலதிகாரியுடன் சரவணக்கு நெருக்கத்தை ஏற்படுத்தியது.

"உங்க எவிடன்ஸ் எல்லாத்தையும் சீல் பண்ணி வெச்சுக்குங்க, சாயங்காலம் கமிஷ்னர் மீட்ல, அவர் முன்னாடி ஓப்பன் பண்ணினா போதும், அவருக்கு இதெல்லாம் சரியாயிருக்கனும்" உத்தரவிட்டார் நடராஜ்.

"Sure sir, I will take care of that, see you again the evening" என்றபடி எழுந்து நகர்ந்தான் சரவணன்.

கமிஷ்னர் அலுவலக வராந்தாவில், நடராஜன் வருகைக்கு காத்திருந்த சரவணன் கடிகாரத்தை பார்த்து நிமிர, அவரின் வருகை, கடிகாரம் சரியாக வேலை செய்வதை உறுதிப்படுத்தியது.

இருவரும் கமிஷ்னரின் தனிப்பட்ட மீட்டிங் அறைக்குள் நுழைந்தனர்,

"Yes, Gentlemen, I trust you both, you can use that X10 projector..switch off that light source." கமிஷ்னர் ஜெய்யின் கணீர் குரல் எதிரொலிக்கவில்லை.

புரொஜக்ட்டர் அந்த அறைக்கு மெல்லிய கருநீல ஒளியூட்டியது. சரவணன் தன் பிரசென்டேசனை தொடங்கினான்.

"சார், இன்ஃபார்மர் விஷ்னு, S.P. கோகுலைவிட, ACP ரங்கராஜ்கிட்டதான் ரொம்ப விசுவாசாம இருந்திருக்கான்"

"கோகுலை திசை திருப்பிட்டு, ரங்கராஜன் இந்த டீல முடிச்சிக் கொடுக்க, கடத்தல் கும்பல் கிட்ட பெரிய தொகைய பேசி வெச்சிருக்காரு,அதுக்கான அட்வான்ஸ், சிங்கப்பூர்ல அவங்க தம்பி பையனுக்கு கைமாறியிருக்கு"

"தனக்கு கிடச்சதுதான் சரியான் கோடுன்னு நினைச்சு, ஃபாரின் கேங்கஸ்டர் ஷாஸா கிட்டப் போன கோகுலுக்கு பெருத்த அவமானம்,இந்த விசயத்தை வெளியில காட்டிக்காம, அவர் விஷ்னுவைத் தேடிட்டு இருக்காரு, ஆனா விஷ்னு இப்ப சிட்னில இருக்கான்"

"Can you start justify what all you said to me now" - என்றார் கமிஷ்னர் ஜெய்.

திரையில், ACP ரங்கராஜ்னின் செல்போன் SMS உரையாடல்கள், அவருக்கு வந்த, அவர் செய்யத போன் கால்களின் விவரங்கள் தோன்றின, அடுத்து அவர் தன் சொல்போனில் பேசிய கால்கள் அனைத்தும் ஸ்பீக்கரில் அளவான ஒலியில் கேட்டது.

"Bas****, I will nail both of them down soon" but இதெல்லாம் உங்களுக்கு எப்படி சாத்தியமாச்சு? " -ஜெய்

"சார், அது வந்து, நான் இந்த வேலைக்கு வரதுக்கு முன்னயே எங்கூட பாலிடெக்னிக்ல படிச்ச பிரசன்னான்னு ஒருத்தன் சொல்போன் சர்வீஸிங்க கடைலதான் பெரும்பாலும் இருப்பேன்"

என்னடா பிரசன்னா, இன்னைக்கு எவானவது செல்போன்ல இருந்து சீன் எடுத்தயா..இல்லை வெரும் ECR ரோட்ல எடுத்த photos-தானா? என்றபடி,கடைக்குள் நுழைந்தான் போலிஸ் அல்லாத சரவணன்.

அது இல்லாமயா மச்சி, நான் காலேஜ் பக்கத்துல கடை வெச்சிருப்பேன் என்றான் பிரசன்னா, தன்னிடம் வரும் அப்பாவி முதல் அடப்பாவி வரை எல்லோருடைய செல்போனில் உள்ள படங்கள், விடியோக்களை திருடிவிட்டுத்தான் repair சரி செய்வான்.

சில வருடங்களுக்கு பின், "என்னப்பா ஏதோ அவசரமான விசயம்ன்னு வரச்சொன்ன, இங்க பார்த்தா, காலேஜ் பசங்களுக்கு பிட்டு ரெடி பண்ணிட்டு இருக்க" என்றபடி நுழைந்தான் போலிஸான சரவணன்.

அவன் தோள் பக்கம் நெருங்கியிவாரு அவன் மேசைமேல் எட்டிப்பார்த்த சரவணன் சற்று குறுகுறுத்தான்.

அவன் பிட்டு என நினைத்த துண்டு சீட்டுகளில், இப்படி எழுதியிருந்தது,

"Sir, எஸ்.பி.கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன். கவலை வேண்டாம். - விஷ்ணு",

"Mr,கோகுல், S W H2 6F - இதுதான் குறியீடு. கவலை வேண்டாம். - விஷ்ணு"

"இங்க பாருங்க, இவன்தான் "Informer Vishnu" அடிக்கடி இவன் கால் வருது ACP போன்ங்கரதால நான் எடுக்கலை...இன்னும் இது மாதிரி நிறைய மேசேஜ் இருக்கு... நீங்கதான் உளவுத்துறையாச்சே..உங்களுக்கு யூஸ் ஆகும்னுதான். கூப்பிடேன்" என்று முடித்தான் பிரசன்னா.

இந்த கதையை அச்சர சுத்தமாக, கமிஷ்னரிடம் சொல்லி முடித்தான் சரவணன், அவர் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்...

அவன் குடுத்த லீட அப்படியே வெச்சிட்டு, போலிஸ் ஆளுங்க யாரும் வரதுக்குள்ள, ACP போன்ல..mobistealth-அப்படிங்கற ஒரு ஸ்பையிங் அப்ளிகேஷன் இன்ஸ்டால் பண்ணிட்டோம்...

நான் அவரை தொடர்ந்து பாலோ பண்ண அந்த சப்ட்வேர் ரொம்ப உதவியா இருந்துச்சு....அதோட இன்னும் authenticity-க்காக சைபர் கிரைம்ல...புதுசா இஸ்ரேல்ல இருந்து இம்ப்போர்ட் பண்ண , ,,Cellebrite-ங்கற ஒரு 'Universal Forensic Extraction Device' -ஐ கேட்டு வாங்கி அவர் போனுக்கு வர எல்லா கால், மேசேஜ் டிராக் பண்ண முடிஞ்சது....அதையெல்லாம் Log-பண்ண முடிஞ்சது.

"புருவத்தை உயர்த்தி, கைதட்டி, well done my boy, this is perfecly enough for my action" -என்றார் கமிஷ்னர்..

ACP ரங்கராஜன், S.P கோகுல் இருவரும் இப்போழுது கமிஷ்னரின் நேரடி விசாரனைக் கைதிகள்.

வழக்கு விசாரணையில் இருப்பதால், அது என்ன கோட், அதை எப்படி பயன்படுத்துகிறார்கள், எதைக் கடத்துகிறார்கள் போன்ற தகவல்களை வெளியிடுவது சட்ட விரோதமானது என்பதால் அது இங்கு தவிர்க்கப்படுகிறது.

"மச்சி, எல்லம் நல்ல படியா முடிஞ்சுது...!" பிரசன்னாவிடம் பேசிமுடித்தான் சரவணன்.

"அப்படியா, கிரேட்" என்ற பிரசன்னா சன்னமாக சிரித்தான்.

உள்ளே கமிஷ்னர், நடராஜனிடம் பேசிக் கொண்டிருந்தார், "யோவ், யாருயா இவன் ஓவர் ஸ்மார்ட்டா. இவன் நம்ம கூட இருந்தா நம்ம பிஸினஸ் பாதிக்கும். இவன டிபார்ட்மென்ட் மாத்து இல்ல ட்ரான்ஸ்பர் பண்ணு"

"வெல்டன் பிரசன்னா!..குட் வொர்க கொஞ்ச நாள் அமைதியாயிரு, உனக்கு பேசினபடி பங்கு உன்னைத்தேடி வரும்" - கமிஷ்னர் ஜெய்.

பிரகாசமாக சிரித்தான் பிரசன்னா...

கதையில் வரும் சில கருவிகள், சாப்ட்வேர்கள் நிஜமானவை.கதையே ஆதாரம் சம்மந்தப்பட்டதால்...அதற்கான ஆதாரங்கள் இங்கே....

http://articles.businessinsider.com/2011-04-25/tech/30008270_1_location-data-cell-phone-data-encrypted-data#ixzz1bGKjgeAg

http://en.wikipedia.org/wiki/Cellebrite

https://www.privacyrights.org/fs/fs2-wire.htm

http://www.mobistealth.com/cheating-spouse-spy-software.php

Saturday, October 8, 2011

விசாரணை - ( சவால் சிறுகதை-2011 )

யுடான்ஸ் சவால் சிறுகதை-2011 போட்டிக்கான எனது இரண்டாவது கதை.

சவால் படம்:


---------------------------------------------------------------------------------

"Pin Hole Camera-பத்தி பப்ளிக் அவேர்னஸ் குடுக்க வேண்டிய நம்ம டிபார்ட்மென்ட்லயே அதை யூஸ் பண்ண வெச்சுட்டீங்க கோகுல்; ஐயம் சாரி..ராம் ரீமூவ் தட் ப்ளீஸ்...." என்றார் கமிஷ்னர் ராஜன்.

S.P கோகுலின் தலைக்கு மேலிருந்த அசோகர் சக்கரத்தின் நடுவிலிருந்து ஒரு சின்ன கேமிரா கருவியை எடுத்து கோகுலின் மேசையில் வைத்தார் இன்ஸ்பெக்டர் ராம்.

"சார், என்ன இதெல்லாம், என்ன நடக்குது இங்க?" விழிபிதிங்கினார் கோகுல்.

"ha ha ha..You stole my words Gokul, do you know what you were doing" - கமிஷ்னர் ராஜன்.

"சார்,சார்...எனக்கு ஹி ஹி,,,,ஒன்னும் புரியலை WTH? " வெட வெடத்தார் கோகுல்.

"என்ன நடுங்கறீங்க? உங்க மேல ஏற்கனவே இலைமறையா நிறைய சந்தேகம் அதானால, நான் தான் உங்க மேல கேமிரா வைக்கச் சொன்னேன்" - கமிஷ்னர் ராஜன்.

கொஞ்சம் சுதாரித்தவராய் தன்னை குற்றம் இல்லாதவனாய் காட்டிக் கொண்டு பேச வாய் எடுத்தார் கோகுல், "அப்படி என்ன சார் நீங்க கண்டு புடிச்சிட்டீங்க?"

"shut up I say! . ask him to come in" கர்ஜித்தார் சார் ராஜன்."

உள்ளே வந்த S.I. தீபக்கை கொஞ்சம் கலங்கிய விழியுடன் தான் எதிர் கொண்டார்..S.P கோகுல், மலம் என்ற பொருள் கொண்ட ஆங்கில வார்த்தையை பலமுறை அமைதியாக உச்சரித்தார்.

"இவரு தலைக்கு மேலையும், ஆயிரம் வேலையும், ஒரு கேமிராவும் இருந்துச்சு" - ராஜன்.

நடந்த குற்றம் என்ன? என்பதுபோல் கோகுலையும், ராஜனையும் மேலும், கீழும் பார்த்தார் தீபக்.

"என் மந்தையிலிருந்த இரண்டு கருப்பு ஆடுகள் இங்கே, என் வேட்டை ஆடு எங்கே?" அதீத நகைச்சுவை உணர்வும், சினிமா வாசமும் உள்ள ராஜன் கோகுலின் வெள்ளை நிற தேங்காய்ப்பூ துண்டு போட்ட, சுழல் நாற்காலியில் இருந்தபடி கேட்டார்.

"குட்மார்னிங் சார்" அடித்த சல்யூட்டில் தெரிந்தது, அது ஒரு இளங்கன்று என்று. விஸ்வநாதன் (எ) விஷ்ணு.

"let us start the game now, ha ha" - angry bird Rajan.

தீபக்,கோகுலையும், பின் இருவரும், விஷ்ணுவையும் முறையே முறைத்தனர்.

"தீபக், என்ன நடக்குதுன்னே தெரியாம உள்ள வந்து, டபுள் கேம் ஆடப்பார்த்த நீங்க, அவனை முறைக்கறீங்களா?", "யு கோ அஹேட் விஷ்ணு"...ராஜன்.

"என் ட்ரெய்னிங்கல மிட் இயர் ரீவீயூவ்ள தான் ராஜன் சார் என்னை மீட் பண்ணி ஒரு சீக்ரெட் ஆப்ரேசனுக்கு ஸ்பெஸல் பர்மிசன்ல கூட்டிட்டு வந்தாரு" - விஷ்ணு முடிக்க 'ஙே' எனப்பார்த்தனர் தீபக் மற்றும் கோகுல்.

"நான் அந்த கடத்தல் கும்பலை 90% நெருங்கிட்டேன், அப்பாதான் தெரிஞ்சிது டிபார்ட்மென்ட் இன்வால்வ்மென்ட், நானே fake informer-ஆனேன்..சின்ன உண்மைகளைச் சொல்லி உங்க ரெண்டு பேரு கிட்டயும் Rapport Build-பண்ணினேன், ஒரு ஸ்டேஜ்ல நீங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் ஏமாத்தறது அதிகமாச்சு, So we are forced to end this game" - முடித்தார் விஷ்ணு.

"Come on Guys, are we in the same page, say Yes, No, May Be, ha ha ha " - ராஜன்.

"All is well, எது என்ன தீபக்குக்கு "Sir, எஸ்.பி.கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன். கவலை வேண்டாம். - விஷ்ணு", அப்புறம் "Mr,கோகுல், S W H2 6F - இதுதான் குறியீடு.

கவலை வேண்டாம். - விஷ்ணு" இப்படி ரெண்டு மெசேஜ்?" வினவினார் ராஜன்.

சற்று தயங்கிய விஷ்ணுவிடம், "You do not worry, இங்க ரெண்டு பேர் ரூம்ல மட்டுமில்ல, செல்போன்லயும் Spyware Apps- போட்டு வாட்ச் பண்ணிட்டுதான் இருக்கோம், this is happening under my IP Camera vigilance" - உருமினார் ராஜன்.

"இவங்களை இனி நான் பார்த்துக்குறேன், அது என்ன Code, அதை அவங்க எப்படி Decode-பண்றாங்க?" over to Vishnu..

"Yes Sir, அவங்க Code-எப்பவும் 6-characters, 4-sets-ல தான் இருக்கும், மொதல்ல Code அனுப்புவாங்க, அப்புறம்தான் Decode Technique;, இதுதான் அவங்க Protocol" உதாரணத்துக்கு "T S B3 J2"

அவங்க Protocol-படி...முதல் ரெண்டு டிஜிட்ஸ் எந்த வண்டியில கடத்தல் நடக்கும்ன்னு சொல்லும், T S-ன்னா Tata Sumo...அடுத்தது வண்டியோட Registration Number., they use position of English letters with multiples, that is letter B-யோட position 2 and its multiple here is 3 அப்ப 06, letter J-யோட position 10 and its multiple here is 2, அப்ப 20 so, Tata Sumo with Registration Number-0620-ங்கற வண்டியிலதான் கடத்தல் நடக்ககுது" முடித்தார் விஷ்னு.

"So, How could you relate here, we have S W H2 6F"- Over to Vishnu again,

"Sir, actually as per my sources, it is S M H2 6F, that is Swaraj Mazda with Registration Number 1636" -", ஆனா இது இவங்களுக்கு இன்னும் தெரியாது - விஷ்ணு..

"Well Done my boy, hmm" சிகரெட்டை கொழுத்தியபடி வெளியேறினார் ராஜன்.

தக்க சமயத்தை எதிர்பார்த்த தீபக் மற்றும் கோகுல் ரிவால்வரை எடுத்து விஷ்ணுவை நோக்கி குறி பார்த்தானர்,

Nooooooooooo என்று அலறியபடி வியர்த்து வெடவெடத்து படுக்கையிலிருந்து எழுந்தான் தன்னை விஷ்ணுவாக இவ்வளவு நேரம் கனவில் நினைத்துக் கொண்டிருந்த சுகுமார்..ச்செ..போலீஸ் வேலைக்கு

ஆசைப்பட்டு போலீஸ் படம், போலீஸ் கதையாப் படிச்சு இப்ப கனவுலையும் எனக்கு பல்பு தான் மிச்சம் என்றபடி சிகரெட்டை எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு போனான் விஷ்ணு (எ) சுகுமார்.
---------------
Over to Sukumar:

மொறைக்காதீங்க ப்ளீஸ்.. கதை முடுஞ்சிடுச்சு கீழ இருக்க யூடான்ஸ் பட்டனை அழுத்தி ஓட்டு போட்டுட்டு போங்க..எனக்கு தூக்கம் இப்பவே கண்னணக்கட்டுது!. நன்றி..சுகுமார்.

Wednesday, October 5, 2011

குறுஞ்செய்தி - ( சவால் சிறுகதை-2011 )இந்த கதை யுடான்ஸ் தமிழ் வலைப்பூக்கள் திரட்டி நடத்தும் சவால் சிறுகதை-2011 போட்டிக்காக எழுதப்பட்டது.படித்துவிட்டு பின்னூட்டமிடுங்கள், யுடான்ஸ் பட்டனை அழுத்தி ஓட்டுப் போடுங்கள். நன்றி

-------------------------------------------------------------------------------------
07-09-2011: 10:30 AM

"இன்னைக்கு எதாவது இம்ப்ரூவ்மென்ட் இருக்கா? இல்ல இன்னும் பிங்கி,பிங்கி, பாங்கிதானா?" அதிகாரமும், ஏளனமும் ஒருசேர கணீர் குரலில் உருமினார் ACP செல்வம்.

"சார், புதுசா clue எதுவும் கிடைக்கலைங்க" என்றார் ராமசாமி.

"யோவ், உங்களையெல்லாம் வெச்சுட்டு நான் புல்லுதான் புடுங்கணும்"..சிகரெட்டைக் கையில் எடுத்துக் கொண்டு வெளியேரினார் ACP.

வராந்தாவில் நின்று தம் அடித்துக் கொண்டிருந்த செல்வத்தை நோக்கி கை அசைத்தபடி வந்தார், சைபர்கிரைம் ACP சண்முகவேல்.

"வாங்க சண்முகம், எப்படியிருக்கு உங்க புது வேலை?" சிகரெட் பாக்கெட்டை நீட்டியபடி கேட்டார் செல்வம்.

"ஐ யம் ஃபைன் சார், நீங்க இப்ப என்ன இன்வெஸ்டிகேசன்ல இருக்கீங்க, ரொம்ப டென்சன் தெரியுதே முகத்துல" - சண்முகம்.

"வழக்கம்போல smuggling chase தான், என்ன இந்த தடவை எந்த base Clue-வும் இல்லை","what are you into now? " - செல்வம்

"ஒரு நாளைக்கு 100 பேராவது வறாங்க, All pronographic spammers,SMS forwarders, anonymlous call victims" - சண்முகம்.

"அடிக்கடி நீங்கதான் எதாவ்து இன்டிரஸ்டிங்கா சொல்லுவீங்களே, இப்ப அப்படி என்ன இருக்கு?"

"சார், இப்ப கூட ஒருத்தன் வந்தான், Android Phone எங்கயோ கண்டு எடுத்திருக்கான், லேட் நைட்ல ஏதோ மெசேஜ் வருதாம், அதுவும் MMS,sometime calls too"

"இது வழக்காமான விசயம் தான், I feel nothing new in it."

"என்னால் அப்படிவிட முடியலை சார், அந்த மெசேஜ்ஜையெல்லாம் எங்க ரைட்டரை, கம்பூட்டர்ல போட்டு, ப்ரின்ட்அவுட் எடுக்க சொல்லி இருக்கேன். this X -person is trying to pass some code to someone. "

"ஏதோ சங்கேதபாசை மாதிரியெல்லாம் இருக்கு...இதுல S.P.கோகுல்ன்னு ஒரு எடத்துல கோட் பண்ணியிருக்கான்..someone from our department is involved in this..I believe."

சண்முகம் முடிக்கும் முன், செல்வத்திருகு ஏதோ பொறிதட்டியது..ஹோல்டஆன். . வாயில் சிகரெட்டை வைத்து ஆழமாய் இழுத்தபடி...ஆகாயத்தை வெரித்துப்பார்த்தார்..."

"S.P.கோகுல்...S.P.கோகுல்...வேற என்னவெல்லம்..இருக்கு அந்த நம்பரை TraceBack பண்ண ட்ரை பண்ணாங்களா உங்க ஆளுங்க?"

"இல்லை சார், I am yet to start..உங்களுக்கு...எதாவ்து புடிபடுதா...?" -சண்முகம்..

"வெல்..இப்ப அந்த ஆள் எங்க?"

"எங்க ஆபிஸ்லதான் இருக்கான் சார்...if you want you can meet him.."

"Yes, வாங்க நானும் உங்க ஆபீஸ்கு வறேன்...அவர்கள், Cyber Cellக்குள் வரவும், ரைட்டர் எல்லா, மெசெஜ்ஜையும் ப்ரின்ட் அவுட் எடுத்து, அவற்றை ரூலர் வைத்து வெட்டி எடுத்துக் கொண்டிருந்ததை அருகில் சென்று எட்டிப் பார்த்தார் செல்வம்,

அந்த காகித துண்டங்களில், இப்படி எழுதி இருந்தது.....

"Sir, எஸ்.பி.கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன். கவலை வேண்டாம். - விஷ்ணு"

"Mr,கோகுல், S W H2 6F - இதுதான் குறியீடு. கவலை வேண்டாம். - விஷ்ணு"

இதை அவர் படிக்கும் நேரத்தில் சொல்லி வைத்தார் போல் ஒரு போன்கால் வந்தது..ஒருவனின் முகம் சொல்போனில் தோன்றியது..."Vishnu Informer" என்று பெயர் மின்னியது...

விஷ்ணு, கோகுல்....informer...code.....தலையில் வைத்திருந்த கையால் முன் நெத்தியை தடவியபடி இந்த வார்த்தைகளை சில முறை முனகினார் செல்வம்.

சார், இந்த ரெண்டு மெசேஜ்ஜும், ரெசீபியண்ட்ஸ் வேற ஆளுங்க மாத்ரி இருக்கு ஆனா, அது ரெண்டும் இந்த நம்பருக்கு ஏன் அனுப்பியிருக்காங்க? யாரு இந்த Vishunu Informer?

நான் கிரைம்ங்க, நீங்க தான் சைபர்செல்,,சீக்கிரம் இந்த நம்பரப்பத்தின ஹிஸ்டிரிய புடிங்க...I think we have link!

****************
07-09-2011: 12:30 PM

Good Afternoon, Thank you for calling AirVoice, How can I assist you today?

This is Assistant commissioner Sanmugam from Cyber Cell, Can I get PRO online?

Sure Sir, Please be on the line for a minute...

Hello..Good Afternoon I am Shiv the PRO of AirVoice.

Good, I need to track a number and all its history for an investigation..I think you have thin timeline

I can do that for you sir, which number you want me track??.

********************
08-09-2011: 11:00 AM

சார் சண்முகம் ஹியர், அந்த நம்பர் பத்தின TraceBack கெடச்சிடுச்சு, நான் எடுத்துதிட்டு வரட்டுங்களா..

"sure"

இந்த நம்பர் ராஜேஸ் குப்தாங்கர பேர்ல பத்து நாளைக்கு முன்னாட்டி வாங்கியிருக்காங்க..அடிக்கடி கால் எதுவும் வரதில்லை நிறைய SMS- போய்ட்டு வந்திருக்கு..இந்த குப்தா குடுத்திருப்பது fake address...

அவுட்கோயிங் ஹிஸ்டிரில ரெண்டு நம்பருக்கு மட்டும் தான் கால் போறது..ஒரு நம்பர் கர்நாடாகால இருக்க ஹூப்பிலியில் ரவிசந்தங்கர பேர்ல இருக்கு...இன்னி ஒரு நம்பர் ராஜமாணிக்கம்ங்கற பேர்ல சென்னைல இருக்கு...

ராஜமாணிக்கத்தோட நம்பர் மிட்நைட்ல, அப்புறம் ஏர்லிமானிங்கல மட்டும்தான் ஆன் ஆகுது..மத்த நேரத்துல சுவிட்ச் ஆப் பண்ணி வெச்சிருக்கு..BTS சிம்கார்ட் ரெஜிஸ்ட்ரேசன் ஹிஸ்டிரிலருந்து இந்த இன்போ கிடைச்சுது.
_______________

இரண்டு ஆண்டுகளுக்கு முன்: 07-09-2009 5:00 PM

Look Straight, கோகுல் இதுதான் நான் நீ திருந்த குடுக்குற கடைசி சந்தர்ப்பம், ஸ்டூடன்ஸ் டிரக்குஸ் யூஸ் பண்றத தடுக்க நாங்க எவ்ளோ மெனக்கெடறோம் நீ இவ்ளோ சீப்ப காசுக்காக..அவுனுங்களுக்கு துணைபோற..உனக்கு கீழயிருக்கவனுங்க எப்படியா உன்னை மதிப்பாங்க..Be Carefull...You may go now

இங்க பாருங்க ராஜமாணிக்கம், இனிமே இந்த ஸ்டேஸ்ன்ல எவனாவது இதுமாதிரி பண்ணான்னு தெரிஞ்சிது..You are answerable...

"ஐயா, அது வந்துங்க..."

"என்னையா வந்து போயின்னிட்டு..போய் வேலையப் பாரு போ..."
------------------------------
08-09-2011: 11:15 AM

"Black sheep.....காஞ்சீபுரம் ரூரல் ஸ்டேஸனுக்கு. கால் போடுங்க..அங்க Inspector கோகுலை என் செல்போன்ல வர சொல்லுங்க..." -செல்வம்

ர்ர்ர்ர்ர்ர்ர்...கன்ட்ரோல் டு..மைக் 22...ஐயா...ACP செல்வம் ஐயாவை நீங்க மொபைல கான்டாக்டாக்ட் பண்ணச் சொல்லி தகவல்ங்கய்யா... நன்றிங்கய்யா..ரோஜர்..ர்ர்ர்ர்ர் டிக்...
-------------------------------
09-09-2011: 11:25 AM

"உனக்கொல்லாம் புத்தியே வராதா,, இம்மீடியெட்டா ஹெட்கோட்டர் வந்து எனக்கு ரிப்போர்ட் பண்ணு.." -செல்வம்

"சர்ர்..சார்ர். யுவர் டைம் அல்ரெடி ஸ்டார்டெட்...பீவ்....பீப்.." - கோகுல்
---------------------------
09-09-2011: 12:30 PM

சொல்லுங்க Mr. Sivagangai Ponnuswamy Kogul..Inspector of Police Kanjeepuram Rural...இந்தவாட்டி எந்த கேங்..drugs, gizmos,,,diamond...என்ன கைமாத்துறாங்க...

ராஜமாணிக்கம் போர்ல போன் வாங்கி கோடங்கி மாதிரி ராத்திரில மட்டும் ஆன் பண்ணி என்னை FM-ல இரவின் மடியில் கேட்டனன்னு நம்ம சொல்றியா...ராஸ்கல் உன்னை 2 வருசத்துக்கு முன்னலயே வார்ன் பண்ணியிருக்கேன்....

எவ்வளவோ மலுப்ப முயற்சித்தும்,வலுவான ஆதரம் இருப்பாதாய் மிரட்டியதில் பயந்து..எல்லா உண்மையையும் கக்கினார் கோகுல்..

மலேசியால இருந்து வர டிரக்ஸ்..மூணு நைஜீரிய பசங்க மூயியமா பெங்களூர் போகுது, அவங்களுக்கு தேவையானத எடுத்துட்டு ஹூப்பிலி ரவிசந்தக்கு அனுப்பிடுவாங்க...department-ல சந்தேகம் வராத மாதிரி நான் மூவ் பண்ணிருவேன்...எனக்குவேற எதுவும் தெரியாது சார்...

இதுக்குமேல வேற எதுவும் இல்லை....09-09-2011: 2:30 PM
----------------------------
10-09-2011: 11:30 AM

அடுத்த நாள் காலை சென்னை கமிசனர் அலுவலகத்தில் போதை பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த மூன்று நைஜீரிய இளைஞ்சர்கள், சுரேஸ் ராவ் (எ) ராஜேஸ் குப்தா, Vishunu Informer (எ) வாசுதேவன்..மொபைல் ஷாப் ஓனர் மற்றும் இன்ஸ்பெக்டர் கோகுலை பத்திரிக்கையாளர் சந்திப்பில் நிருத்தினார். ACP செல்வம்..தனக்கு உதவிய CyberCell ACP சண்முகத்திற்கு நன்றி தெரிவித்தார்.