Saturday, October 8, 2011

விசாரணை - ( சவால் சிறுகதை-2011 )

யுடான்ஸ் சவால் சிறுகதை-2011 போட்டிக்கான எனது இரண்டாவது கதை.

சவால் படம்:


---------------------------------------------------------------------------------

"Pin Hole Camera-பத்தி பப்ளிக் அவேர்னஸ் குடுக்க வேண்டிய நம்ம டிபார்ட்மென்ட்லயே அதை யூஸ் பண்ண வெச்சுட்டீங்க கோகுல்; ஐயம் சாரி..ராம் ரீமூவ் தட் ப்ளீஸ்...." என்றார் கமிஷ்னர் ராஜன்.

S.P கோகுலின் தலைக்கு மேலிருந்த அசோகர் சக்கரத்தின் நடுவிலிருந்து ஒரு சின்ன கேமிரா கருவியை எடுத்து கோகுலின் மேசையில் வைத்தார் இன்ஸ்பெக்டர் ராம்.

"சார், என்ன இதெல்லாம், என்ன நடக்குது இங்க?" விழிபிதிங்கினார் கோகுல்.

"ha ha ha..You stole my words Gokul, do you know what you were doing" - கமிஷ்னர் ராஜன்.

"சார்,சார்...எனக்கு ஹி ஹி,,,,ஒன்னும் புரியலை WTH? " வெட வெடத்தார் கோகுல்.

"என்ன நடுங்கறீங்க? உங்க மேல ஏற்கனவே இலைமறையா நிறைய சந்தேகம் அதானால, நான் தான் உங்க மேல கேமிரா வைக்கச் சொன்னேன்" - கமிஷ்னர் ராஜன்.

கொஞ்சம் சுதாரித்தவராய் தன்னை குற்றம் இல்லாதவனாய் காட்டிக் கொண்டு பேச வாய் எடுத்தார் கோகுல், "அப்படி என்ன சார் நீங்க கண்டு புடிச்சிட்டீங்க?"

"shut up I say! . ask him to come in" கர்ஜித்தார் சார் ராஜன்."

உள்ளே வந்த S.I. தீபக்கை கொஞ்சம் கலங்கிய விழியுடன் தான் எதிர் கொண்டார்..S.P கோகுல், மலம் என்ற பொருள் கொண்ட ஆங்கில வார்த்தையை பலமுறை அமைதியாக உச்சரித்தார்.

"இவரு தலைக்கு மேலையும், ஆயிரம் வேலையும், ஒரு கேமிராவும் இருந்துச்சு" - ராஜன்.

நடந்த குற்றம் என்ன? என்பதுபோல் கோகுலையும், ராஜனையும் மேலும், கீழும் பார்த்தார் தீபக்.

"என் மந்தையிலிருந்த இரண்டு கருப்பு ஆடுகள் இங்கே, என் வேட்டை ஆடு எங்கே?" அதீத நகைச்சுவை உணர்வும், சினிமா வாசமும் உள்ள ராஜன் கோகுலின் வெள்ளை நிற தேங்காய்ப்பூ துண்டு போட்ட, சுழல் நாற்காலியில் இருந்தபடி கேட்டார்.

"குட்மார்னிங் சார்" அடித்த சல்யூட்டில் தெரிந்தது, அது ஒரு இளங்கன்று என்று. விஸ்வநாதன் (எ) விஷ்ணு.

"let us start the game now, ha ha" - angry bird Rajan.

தீபக்,கோகுலையும், பின் இருவரும், விஷ்ணுவையும் முறையே முறைத்தனர்.

"தீபக், என்ன நடக்குதுன்னே தெரியாம உள்ள வந்து, டபுள் கேம் ஆடப்பார்த்த நீங்க, அவனை முறைக்கறீங்களா?", "யு கோ அஹேட் விஷ்ணு"...ராஜன்.

"என் ட்ரெய்னிங்கல மிட் இயர் ரீவீயூவ்ள தான் ராஜன் சார் என்னை மீட் பண்ணி ஒரு சீக்ரெட் ஆப்ரேசனுக்கு ஸ்பெஸல் பர்மிசன்ல கூட்டிட்டு வந்தாரு" - விஷ்ணு முடிக்க 'ஙே' எனப்பார்த்தனர் தீபக் மற்றும் கோகுல்.

"நான் அந்த கடத்தல் கும்பலை 90% நெருங்கிட்டேன், அப்பாதான் தெரிஞ்சிது டிபார்ட்மென்ட் இன்வால்வ்மென்ட், நானே fake informer-ஆனேன்..சின்ன உண்மைகளைச் சொல்லி உங்க ரெண்டு பேரு கிட்டயும் Rapport Build-பண்ணினேன், ஒரு ஸ்டேஜ்ல நீங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் ஏமாத்தறது அதிகமாச்சு, So we are forced to end this game" - முடித்தார் விஷ்ணு.

"Come on Guys, are we in the same page, say Yes, No, May Be, ha ha ha " - ராஜன்.

"All is well, எது என்ன தீபக்குக்கு "Sir, எஸ்.பி.கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன். கவலை வேண்டாம். - விஷ்ணு", அப்புறம் "Mr,கோகுல், S W H2 6F - இதுதான் குறியீடு.

கவலை வேண்டாம். - விஷ்ணு" இப்படி ரெண்டு மெசேஜ்?" வினவினார் ராஜன்.

சற்று தயங்கிய விஷ்ணுவிடம், "You do not worry, இங்க ரெண்டு பேர் ரூம்ல மட்டுமில்ல, செல்போன்லயும் Spyware Apps- போட்டு வாட்ச் பண்ணிட்டுதான் இருக்கோம், this is happening under my IP Camera vigilance" - உருமினார் ராஜன்.

"இவங்களை இனி நான் பார்த்துக்குறேன், அது என்ன Code, அதை அவங்க எப்படி Decode-பண்றாங்க?" over to Vishnu..

"Yes Sir, அவங்க Code-எப்பவும் 6-characters, 4-sets-ல தான் இருக்கும், மொதல்ல Code அனுப்புவாங்க, அப்புறம்தான் Decode Technique;, இதுதான் அவங்க Protocol" உதாரணத்துக்கு "T S B3 J2"

அவங்க Protocol-படி...முதல் ரெண்டு டிஜிட்ஸ் எந்த வண்டியில கடத்தல் நடக்கும்ன்னு சொல்லும், T S-ன்னா Tata Sumo...அடுத்தது வண்டியோட Registration Number., they use position of English letters with multiples, that is letter B-யோட position 2 and its multiple here is 3 அப்ப 06, letter J-யோட position 10 and its multiple here is 2, அப்ப 20 so, Tata Sumo with Registration Number-0620-ங்கற வண்டியிலதான் கடத்தல் நடக்ககுது" முடித்தார் விஷ்னு.

"So, How could you relate here, we have S W H2 6F"- Over to Vishnu again,

"Sir, actually as per my sources, it is S M H2 6F, that is Swaraj Mazda with Registration Number 1636" -", ஆனா இது இவங்களுக்கு இன்னும் தெரியாது - விஷ்ணு..

"Well Done my boy, hmm" சிகரெட்டை கொழுத்தியபடி வெளியேறினார் ராஜன்.

தக்க சமயத்தை எதிர்பார்த்த தீபக் மற்றும் கோகுல் ரிவால்வரை எடுத்து விஷ்ணுவை நோக்கி குறி பார்த்தானர்,

Nooooooooooo என்று அலறியபடி வியர்த்து வெடவெடத்து படுக்கையிலிருந்து எழுந்தான் தன்னை விஷ்ணுவாக இவ்வளவு நேரம் கனவில் நினைத்துக் கொண்டிருந்த சுகுமார்..ச்செ..போலீஸ் வேலைக்கு

ஆசைப்பட்டு போலீஸ் படம், போலீஸ் கதையாப் படிச்சு இப்ப கனவுலையும் எனக்கு பல்பு தான் மிச்சம் என்றபடி சிகரெட்டை எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு போனான் விஷ்ணு (எ) சுகுமார்.
---------------
Over to Sukumar:

மொறைக்காதீங்க ப்ளீஸ்.. கதை முடுஞ்சிடுச்சு கீழ இருக்க யூடான்ஸ் பட்டனை அழுத்தி ஓட்டு போட்டுட்டு போங்க..எனக்கு தூக்கம் இப்பவே கண்னணக்கட்டுது!. நன்றி..சுகுமார்.

9 comments:

veedu said...

ஆஹா...ஓட்டும் போட்டாச்சு

viswa said...

yenna oru twistu,,,...........m

asksukumar said...
This comment has been removed by the author.
asksukumar said...

@veedu, நன்றி நண்பா! : )

asksukumar said...

விஸ்வா, நன்றி : )

இராஜராஜேஸ்வரி said...

யூடான்ஸ் பட்டனை அழுத்தி ஓட்டு போட்டுட்டு போங்க..

ஓட்டு போட்டாச்சு

asksukumar said...

@இராஜராஜேஸ்வரி, உங்கள் வருகைக்கும், ஓட்டுக்கும் நன்றி :)

நம்பிக்கைபாண்டியன் said...

நல்ல முயற்சி,
ஆங்கில வார்த்தைகளை குறைத்திருக்கலாம், வாழ்த்துக்கள்

asksukumar said...

@நம்பிக்கைபாண்டியன், இளைய தலைமுறை போலிஸ் கதை என்பதால், ஆங்கில வார்த்தைகளை தவிர்க்க இயலவில்லை. தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே :)

Post a Comment