Thursday, October 20, 2011

திருட்டை திருடிய திருட்டு (சவால் சிறுகதை-2011)

யுடான்ஸ் சவால் சிறுகதை-2011 போட்டிக்கான எனது மூன்றாவது கதை.

சவால் படம்:


---------------------------------------------------------------------------------
சரவணன் நீங்க உறுதியா இருக்கீங்களா? Intelligence Bureau -வின் தலைமை அதிகாரி நடராஜின் இந்த கேள்விக்கு, அவர் கண்களை ஊடுருவி, கண்டிப்பாக சார், என்றார் இன்ஸ்பெக்டர் சரவணன்.

"இந்த விசயத்தல, சம்மந்தப்பட்டவங்க சாதாரண ஆளுங்க இல்லை..கமிஷ்னர் ஜெய், நேரடியா இவங்களை டார்கெட் பண்ணி, வாட்ச் பண்ண சொல்லியிருக்காரு, அதனாலதான் கேட்டேன்" என்றார் நடராஜன்.

"உங்க கேள்வியோட அழுத்தம் எனக்கு புரிஞ்சது சார், ஆனா, நம்மகிட்ட எல்லா ஆதாரமும் பக்காவாயிருக்கு" இந்த தெளிவுதான் மேலதிகாரியுடன் சரவணக்கு நெருக்கத்தை ஏற்படுத்தியது.

"உங்க எவிடன்ஸ் எல்லாத்தையும் சீல் பண்ணி வெச்சுக்குங்க, சாயங்காலம் கமிஷ்னர் மீட்ல, அவர் முன்னாடி ஓப்பன் பண்ணினா போதும், அவருக்கு இதெல்லாம் சரியாயிருக்கனும்" உத்தரவிட்டார் நடராஜ்.

"Sure sir, I will take care of that, see you again the evening" என்றபடி எழுந்து நகர்ந்தான் சரவணன்.

கமிஷ்னர் அலுவலக வராந்தாவில், நடராஜன் வருகைக்கு காத்திருந்த சரவணன் கடிகாரத்தை பார்த்து நிமிர, அவரின் வருகை, கடிகாரம் சரியாக வேலை செய்வதை உறுதிப்படுத்தியது.

இருவரும் கமிஷ்னரின் தனிப்பட்ட மீட்டிங் அறைக்குள் நுழைந்தனர்,

"Yes, Gentlemen, I trust you both, you can use that X10 projector..switch off that light source." கமிஷ்னர் ஜெய்யின் கணீர் குரல் எதிரொலிக்கவில்லை.

புரொஜக்ட்டர் அந்த அறைக்கு மெல்லிய கருநீல ஒளியூட்டியது. சரவணன் தன் பிரசென்டேசனை தொடங்கினான்.

"சார், இன்ஃபார்மர் விஷ்னு, S.P. கோகுலைவிட, ACP ரங்கராஜ்கிட்டதான் ரொம்ப விசுவாசாம இருந்திருக்கான்"

"கோகுலை திசை திருப்பிட்டு, ரங்கராஜன் இந்த டீல முடிச்சிக் கொடுக்க, கடத்தல் கும்பல் கிட்ட பெரிய தொகைய பேசி வெச்சிருக்காரு,அதுக்கான அட்வான்ஸ், சிங்கப்பூர்ல அவங்க தம்பி பையனுக்கு கைமாறியிருக்கு"

"தனக்கு கிடச்சதுதான் சரியான் கோடுன்னு நினைச்சு, ஃபாரின் கேங்கஸ்டர் ஷாஸா கிட்டப் போன கோகுலுக்கு பெருத்த அவமானம்,இந்த விசயத்தை வெளியில காட்டிக்காம, அவர் விஷ்னுவைத் தேடிட்டு இருக்காரு, ஆனா விஷ்னு இப்ப சிட்னில இருக்கான்"

"Can you start justify what all you said to me now" - என்றார் கமிஷ்னர் ஜெய்.

திரையில், ACP ரங்கராஜ்னின் செல்போன் SMS உரையாடல்கள், அவருக்கு வந்த, அவர் செய்யத போன் கால்களின் விவரங்கள் தோன்றின, அடுத்து அவர் தன் சொல்போனில் பேசிய கால்கள் அனைத்தும் ஸ்பீக்கரில் அளவான ஒலியில் கேட்டது.

"Bas****, I will nail both of them down soon" but இதெல்லாம் உங்களுக்கு எப்படி சாத்தியமாச்சு? " -ஜெய்

"சார், அது வந்து, நான் இந்த வேலைக்கு வரதுக்கு முன்னயே எங்கூட பாலிடெக்னிக்ல படிச்ச பிரசன்னான்னு ஒருத்தன் சொல்போன் சர்வீஸிங்க கடைலதான் பெரும்பாலும் இருப்பேன்"

என்னடா பிரசன்னா, இன்னைக்கு எவானவது செல்போன்ல இருந்து சீன் எடுத்தயா..இல்லை வெரும் ECR ரோட்ல எடுத்த photos-தானா? என்றபடி,கடைக்குள் நுழைந்தான் போலிஸ் அல்லாத சரவணன்.

அது இல்லாமயா மச்சி, நான் காலேஜ் பக்கத்துல கடை வெச்சிருப்பேன் என்றான் பிரசன்னா, தன்னிடம் வரும் அப்பாவி முதல் அடப்பாவி வரை எல்லோருடைய செல்போனில் உள்ள படங்கள், விடியோக்களை திருடிவிட்டுத்தான் repair சரி செய்வான்.

சில வருடங்களுக்கு பின், "என்னப்பா ஏதோ அவசரமான விசயம்ன்னு வரச்சொன்ன, இங்க பார்த்தா, காலேஜ் பசங்களுக்கு பிட்டு ரெடி பண்ணிட்டு இருக்க" என்றபடி நுழைந்தான் போலிஸான சரவணன்.

அவன் தோள் பக்கம் நெருங்கியிவாரு அவன் மேசைமேல் எட்டிப்பார்த்த சரவணன் சற்று குறுகுறுத்தான்.

அவன் பிட்டு என நினைத்த துண்டு சீட்டுகளில், இப்படி எழுதியிருந்தது,

"Sir, எஸ்.பி.கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன். கவலை வேண்டாம். - விஷ்ணு",

"Mr,கோகுல், S W H2 6F - இதுதான் குறியீடு. கவலை வேண்டாம். - விஷ்ணு"

"இங்க பாருங்க, இவன்தான் "Informer Vishnu" அடிக்கடி இவன் கால் வருது ACP போன்ங்கரதால நான் எடுக்கலை...இன்னும் இது மாதிரி நிறைய மேசேஜ் இருக்கு... நீங்கதான் உளவுத்துறையாச்சே..உங்களுக்கு யூஸ் ஆகும்னுதான். கூப்பிடேன்" என்று முடித்தான் பிரசன்னா.

இந்த கதையை அச்சர சுத்தமாக, கமிஷ்னரிடம் சொல்லி முடித்தான் சரவணன், அவர் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்...

அவன் குடுத்த லீட அப்படியே வெச்சிட்டு, போலிஸ் ஆளுங்க யாரும் வரதுக்குள்ள, ACP போன்ல..mobistealth-அப்படிங்கற ஒரு ஸ்பையிங் அப்ளிகேஷன் இன்ஸ்டால் பண்ணிட்டோம்...

நான் அவரை தொடர்ந்து பாலோ பண்ண அந்த சப்ட்வேர் ரொம்ப உதவியா இருந்துச்சு....அதோட இன்னும் authenticity-க்காக சைபர் கிரைம்ல...புதுசா இஸ்ரேல்ல இருந்து இம்ப்போர்ட் பண்ண , ,,Cellebrite-ங்கற ஒரு 'Universal Forensic Extraction Device' -ஐ கேட்டு வாங்கி அவர் போனுக்கு வர எல்லா கால், மேசேஜ் டிராக் பண்ண முடிஞ்சது....அதையெல்லாம் Log-பண்ண முடிஞ்சது.

"புருவத்தை உயர்த்தி, கைதட்டி, well done my boy, this is perfecly enough for my action" -என்றார் கமிஷ்னர்..

ACP ரங்கராஜன், S.P கோகுல் இருவரும் இப்போழுது கமிஷ்னரின் நேரடி விசாரனைக் கைதிகள்.

வழக்கு விசாரணையில் இருப்பதால், அது என்ன கோட், அதை எப்படி பயன்படுத்துகிறார்கள், எதைக் கடத்துகிறார்கள் போன்ற தகவல்களை வெளியிடுவது சட்ட விரோதமானது என்பதால் அது இங்கு தவிர்க்கப்படுகிறது.

"மச்சி, எல்லம் நல்ல படியா முடிஞ்சுது...!" பிரசன்னாவிடம் பேசிமுடித்தான் சரவணன்.

"அப்படியா, கிரேட்" என்ற பிரசன்னா சன்னமாக சிரித்தான்.

உள்ளே கமிஷ்னர், நடராஜனிடம் பேசிக் கொண்டிருந்தார், "யோவ், யாருயா இவன் ஓவர் ஸ்மார்ட்டா. இவன் நம்ம கூட இருந்தா நம்ம பிஸினஸ் பாதிக்கும். இவன டிபார்ட்மென்ட் மாத்து இல்ல ட்ரான்ஸ்பர் பண்ணு"

"வெல்டன் பிரசன்னா!..குட் வொர்க கொஞ்ச நாள் அமைதியாயிரு, உனக்கு பேசினபடி பங்கு உன்னைத்தேடி வரும்" - கமிஷ்னர் ஜெய்.

பிரகாசமாக சிரித்தான் பிரசன்னா...

கதையில் வரும் சில கருவிகள், சாப்ட்வேர்கள் நிஜமானவை.கதையே ஆதாரம் சம்மந்தப்பட்டதால்...அதற்கான ஆதாரங்கள் இங்கே....

http://articles.businessinsider.com/2011-04-25/tech/30008270_1_location-data-cell-phone-data-encrypted-data#ixzz1bGKjgeAg

http://en.wikipedia.org/wiki/Cellebrite

https://www.privacyrights.org/fs/fs2-wire.htm

http://www.mobistealth.com/cheating-spouse-spy-software.php

11 comments:

நடராஜன் said...

எக்கசக்க technolgy! :)

asksukumar said...

வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பா!

மதுரைநண்பன் said...

அருமை ஆனா படத்துல ஒரு பாட்டு, சண்டை, காமடி இதுலா இல்ல பரவாஇல்ல

Anonymous said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே...

asiya omar said...

ஆஹா ,முன்றாவது கதையா? எனக்கு ஒன்று எழுதுவதற்குள் மண்டை காய்ந்து விட்டது..
வாழ்த்துக்கள்.

asksukumar said...

@ரெவெரி வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி நண்பரே!

asksukumar said...

@asiya omar, மிக்க நன்றி :)

வெண் புரவி said...

நல்ல டெக்னிகல் கதை...நல்லா இருக்கு.
அப்படியே என்னுடைய கதையும் படிசுடுங்க...
http://venpuravi.blogspot.com/2011/10/blog-post_30.html

asksukumar said...

@வெண் புரவி, மிக்க நன்றி நண்பா :)

bigilu said...

வாழ்த்துக்கள்.. நிறைய உழச்சியிருக்கீங்க போல.. டெக்னாலஜியெல்லாம் பொலக்குதுங்க....

Ramesh Ramar said...

அருமையான பதிவு.
மிகவும் நன்று ...
Tamil News | Latest Tamil News | Tamil Newspaper | Kollywood News

Post a Comment