Thursday, May 26, 2011

அய்யோ பாவம் சுகுமாரு

ஒரு அழகிய பொன்மாலை பொழுது, பண்பலை வானொலி ஒன்றில் ஜிங் சிக்கா சிக்கா ஜிங் பாடல் காதை கிழிப்பதையும் பொருத்துக்கொண்டு, பாச்சலூர் மலையின்,ஓங்கு தாங்கான மரங்களையும்,அதனுடே வந்த மெல்லிய காற்றையும் ரசித்தபடி ஒரு கருத்தமா டைப் பஸ்ஸில் வந்து கொண்டு இருந்தான் நம் கதையின் நாயகன் சுகுமார்.

பழனி என்னும் அழகிய தமிழ் பெயரை இப்படியும் உச்சரிக்க முடியுமா? என நடத்துனரை வியந்த படி.ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டேண்டில் பழனி செல்லும் பஸ்ஸில் ஏறினான்.ஜன்னல் ஓற இருக்கையில் அமர்ந்தவன்..மலைப்பாதை பயண கலைப்பில்..பண்பலை பாடல்களை கேட்டபடி உறங்கி போனான்.

"பழனி சீட்டெல்லம் இங்கயே இறங்குங்கப்பா வ்ண்டி பஸ்டேண்டு போகாது".. நடத்துனரின் குரல் கேட்டு விழித்தவன்..காதில்...பொள்ளாச்சி..பொள்ளாச்சி..டுர்ர் டுர்ர் என உருமிய அந்த சிங்கம் புலி வரைந்த வெள்ளை நிற பஸ் கண்ணில் பட்டது.

பொள்ளாச்சிக்கு போக டிக்கெட்டும்.வாங்கியாச்சு..அப்புறம் என்ன பழையபடி,ஜன்னல் ஓற இருக்கை..பண்பலை பாடல்கள்..அப்படியே..கண்ணு..சொக்கும் போது..அடிச்சிது பாருங்க..அடிவயித்துல..ஸாக்கு..ஐய்யோன்னு அலறி அடிச்சு.அண்ணா பஸ்ஸ நிருத்துங்க.பஸ்ஸ நிருத்துங்கன்னு கத்தினான்..

யோ..என்னயா ஆச்சு? ஏன்யா கத்தற? பதிலுக்கு கத்தினாரு நம்ம நடத்துனர். அண்ணா நான் வந்த பழனி பஸ்ல என் பேகை வெச்சிட்டேண்ணா..ப்ளீஸ் பஸ்ஸ நிருத்துங்னு அழுகாத கொறயாக சொன்னான். போப்பா போ..போய் பாரு..இருந்தா லக்கு..ஆமா அதுல அப்பிடி என்ன இருக்கு?..அதுவந்து..பத்தாயிறம் ரூவா டி.டி அப்புறம் ஒரு முக்கியமான் ஒரு லெட்டரும்.இருக்குங்க..அது கெடைக்காட்டி,எங்க மேனேஜரு..என்னை கொன்ருவாங்க!.

அட இருக்கும் போய் பாருப்பா..என்றபடி..எதிரில் வந்த பஸ்ஸில் ஏற்றி விட்டார்.

பழனி வந்ததும், கத்தி..கதறி..போறவங்க வறவங்ககிட்ட எல்லாம்..அண்ணா.அந்த சிங்கம் வரஞ்ச வெள்ளை கலர் பஸ்ஸ பார்த்தீங்காளான்னு..கேட்டுட்டு வந்தான்..

யாரும் பதில் சொன்ன மாதிரி தெரியலை..பழனி கோவில் படிக்கட்டு மாதிரி திருநீர் வெச்சு இருந்த..அந்த பெரியவர்..வந்து..ஏங்கண்ணு அழுகறன்னு? கேட்டவுடனே..ஐய்யா.. நான் சிங்க படம் வரஞ்ச வெள்ளை கலரு பஸ்ஸல என் பேக்க தொலைச்சுட்டங்க அது கெடைக்கலினா..என் மேனேஜரு..என்னை வேளைய விட்டு தொறத்திடுவாருங்கன்னு..மறுபடியும்..அழுக ஆராம்பிச்சுட்டான். நம்ம சுகுமாரு..

அட கண்ணு..அந்த பஸ்ஸு இந்நேரம்..போயிருக்குமே என்றவுடன்..வட்டக்கண்ணாடி போட்ட மேனேஜர் சுகுமார் மனக்கண்ணல வந்து.. நாலு பேர் முன்னாடி..மானங்கெட்ட வார்த்தையில் தீட்டி தீர்த்தார்..இனி நாம செத்தம்டானு..அழுது..அழுது..புழம்பினான். "நீங்க ஒன்னு பன்னுங்க..திண்டுக்கல் போய் அந்த பஸ்ஸல தேடிபாருங்க".."இங்கயே வெயிட் பன்னுங்க".அட எவனாவது எடுத்து பாத்துட்டு ஒன்னயும் கானம்னு..வீசிருப்பானுக" இப்படி சில பல.. நேயர் விருப்பங்களைக் கேட்டு மீண்டும் பத்தாயிறம் ரூவா டி.டி,மேலும் தன் மேனேஜர்,வேளை பறிபோவது எல்லா வற்றையும் நினைத்து..அழுது..நொந்து!.நொந்து அழுது!

இங்க நிருத்துங்க! ஹலோ..ஹலோ..உங்களைதாங்க..என்னங்க இது.. நானும் இப்படியே.எழுதிட்டு இருப்பேன்.. நீங்களும் படிச்சிட்டு...அய்யோ பாவம் சுகுமாருன்னு..உச்சு கொட்டுவீங்க...ஏங்க உங்க மனசெல்லாம்..இப்படியே படிக்க/நினைக்க ஆசைப்படுது?..எல்லாம் இந்த மெகா சீரிய்ல் பண்ற வேளை...

நீங்க நெனச்ச மாதிரி ஒன்னும் ஆகலை..பழனி பஸ் ஸ்டேண்டுல, எறங்கனதும்..ஒருத்தர் கிட்ட சிங்க படம் வரஞ்ச பஸ்ஸ பத்தி அழுதுட்டே கேட்டான்..அதுக்கு அவரும்..அட நம்ம TMR பஸ்ஸா..அது பெட்ரொல் பங்குல இருக்கும்னு சொன்னரு..அங்க போய்..அநத டிரைவர்..கண்டக்டர்கிட்ட..அவன் கதைய சொல்லி..பழனி அடிவாரத்துல குதிரை லத்தி வாசத்துல..குதிரை வண்டி ஸ்டேண்டு ஓறமா..அவங்களுக்கு டிபன் வாங்கி குடுத்துட்டு..பத்தாயிறம் ரூவா டி.டி இருந்த பேகை வாங்கிட்டு..கோவை வந்து.. சேர்ந்தான்.நம் கதையின் நாயகன் சுகுமார்.

இப்பிடி எழுதுனா..கதைய முடிச்சா..எவ்ளோ பாஸிட்டிவ்வா இருக்கு..அதைவிட்டு..அழுது..மறுபடியும்..அழுதுன்னு..உங்களோட ஓரே கஸ்டமப்பா..போச்சு போங்க! எதுக்கும் ஒரு நல்ல மனநல டாக்டரைப் பாருங்க..அப்ப, நான் வருட்டா??!!!!

பி.கு: இது கற்பனையல்ல நிஜம். நடந்தது எனக்குதான்..வ்ருடம்..2003.கதை எழுதியது..2004ல்..வலையில் இப்பொழுது 2011ல்.

2 comments:

பிசாசு said...

முதல் கதையிலயே ம்ன நல மருத்துவ்ர் வரை கொண்டு போய்ட்டீங்க.. LOL #வாழ்த்துக்கள்

kunthavai said...

ஸ்ஸ்.. சீரியல் உங்கள எந்த லெவலுக்கு யோசிக்க வைக்குது பாருங்க ! நல்லதொரு முயற்சி

- அனு.

Post a Comment